விக்னேஷ் சிவனை மிஞ்சிய மகிழ் திருமேனி.. ஏகே 62-வுக்காக தூசி தட்டிய சூப்பர் ஹிட் படம்

துணிவு படத்திற்கு பின் அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் படத்தின் கதையை தயார் செய்யாததால் இப்போது அந்த வாய்ப்பு மகிழ்திருமேனிக்கு வந்திருக்கிறது. ஆனால் மகிழ்திருமேனியும் விக்னேஷ் சிவனை மிஞ்சும் அளவுக்கு படத்தின் கதையை தயார் செய்வதில் காலதாமதம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்.

இதனால் ஏகே 62 படத்திற்காக சூப்பர் ஹிட் படத்தை தூசி தட்டி கையில் எடுத்துள்ளனர். மகிழ்திருமேனி படத்தின் கதையை ஒரு மாத காலமாகவே தயார் செய்து வருகிறார். எப்போது அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகவும் தாமதமாக நடைபெறுவதால் இந்த படத்தின் தயாரிப்பாளரான லைக்கா நிறுவனம் மகிழ்திருமேனியிடம் உங்கள் கதையை  அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். 

Also Read: அஜித் போலவே 80களில் இருந்த நடிகர்.. இரண்டு பேருக்குள் இப்படி ஒரு ஒற்றுமையா?

அதற்கு பதில் ஒரு மிகப் பெரிய வெற்றி பெற்ற கொரியன் படத்தை வாங்கி வைத்துள்ளேன். அதை படமாக்குங்கள் என்று கூறியுள்ளார். மகிழ்திருமேனியும் அந்த படத்தை பார்த்து தயார் செய்ய முயற்சி செய்யும்போது கண்டிப்பாக இது இன்னும் மூன்று மாத காலமாக ஆகிவிடும். அதனால் என் கதையை வைத்து எடுத்துவிடலாம் என்று கூறியிருக்கிறார். 

இதனால் இப்போது ஏகே 62 படத்திற்காக, ‘மகிழ்ச்திருமேனியின் கதையா? அல்லது தூசி தட்டப்பட்ட கொரியன் படத்தின் கதையா?’ என, எந்த கதையை தேர்வு செய்து தயார் செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதேசமயம் அஜித்துக்கும் கொரியன் படத்தின் கதை கேட்டு பிடித்து விட்டதாம். கூடிய விரைவில் எந்த கதை என்று தெரிய வரும்.

Also Read: நடுக்கடலில் ரொமான்ஸ் செய்யும் அஜித், ஷாலினி.. வைரலாகும் போட்டோஸ்

ஆனால் கொரியன் படத்தின் கதையை தமிழுக்கு ஏற்றவாறு திரை கதையை மாற்றி, படத்தினை துவங்கினால் வெகு நாட்களாகும் என மகிழ்திருமேனி, அதை இயக்க முடியாது என்று சொல்கிறார்.  இப்படி ஏகே 62 படத்தில் கதையைத் தேர்ந்தெடுப்பதிலேயே பல மாதங்களை இழுத்தடிப்பதால் தல ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

மறுபுறம் வாரிசு படத்தை முடித்த பிறகு தளபதி விஜய் லியோ படத்தின் படப்பிடிப்பில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அஜித்தின் ஏகே 62 படத்தின் கதைக்கே திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் லைக்கா மற்றும் அஜித் இருவரும் இதற்காக ஒரு முடிவு கட்டுவார்கள் என்றும் அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

Also Read: பழசை மறந்த விக்னேஷ் சிவன்.. அஜித்துக்கு ஆறுதல் சொல்லி போட்ட பதிவு