வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜாம்பவான்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மகிழ்திருமேனி.. ஏகே62 படத்தில் இணைந்த பிரபலங்கள்

அஜித், மகிழ்திருமேனி கூட்டணியில் ஏகே 62 படம் விரைவில் உருவாக இருக்கிறது. மேலும் இந்த படத்தை லைக்கா பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. நீண்ட நாட்களாக ஏகே 62 படத்தை பற்றிய பேச்சு வார்த்தை நடந்து வந்தாலும் அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் அறிவிப்புக்கு முன்பே படத்தில் மற்ற பிரபலங்களை படக்குழு தேர்வு செய்து வருகிறார்களாம். அந்த வகையில் இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்களை ஏகே 62 படத்திற்காக ஸ்கெட்ச் போட்டு தூக்கி உள்ளார் இயக்குனர் மகிழ்திருமேனி. அதாவது விஜய்யின் லியோ படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

Also Read : அஜித், நயன்தாராவை ஒதுக்க இதுதான் காரணமா..? தயாரிப்பாளர்களை பரிதவிக்க விடும் லேடி சூப்பர் ஸ்டார்

அஜித்தின் பெரும்பான்மையான படங்களில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வந்தார். கடைசியாக வெளியான துணிவு படத்தில் ஜிப்ரான் இசையமைத்தார். இப்போது உருவாக உள்ள ஏகே 62 படத்தில் அனிருத்தை படக்குழு தேர்வு செய்து உள்ளார்களாம். ஆகையால் அஜித், விஜய் என இரு பெரிய நடிகர்களின் படங்களுக்கும் ஒரே நேரத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார்.

மேலும் ஒரு படத்திற்கு ஒளிப்பதிவு மிகவும் முக்கியம். அந்த வகையில் ஏகே 62 படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திலும் நீரவ் ஷா தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார்.

Also Read : சாப்பாடும் கொடுக்காமல், சம்பளமும்கொடுக்காமல் அசிங்கப்படுத்திய படக்குழு.. அஜித், விஜய் பட வில்லனுக்கு நடந்த கொடூரம்

இந்நிலையில் மீண்டும் அஜித்தின் ஏகே 62 படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார். இப்போதே படத்தின் முக்கிய பிரபலங்கள் ஒவ்வொருவராக படக்குழு தேர்வு செய்து வருகிறது. அடுத்ததாக படத்தில் நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் முனைப்பில் தற்போது மகிழ்திருமேனி செயல்பட்டு வருகிறாராம்.

ஆகையால் இன்னும் சில தினங்களில் ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் டைட்டிலும் வெளியாகும் என்று நம்பகத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மற்ற பிரபலங்கள் யார் ஏகே 62 படத்தில் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Also Read : நெஞ்ச நக்குற கதை வேண்டாம்.. படம் பார்ப்பது போலையே ஸ்டோரியை சொல்லி அஜித்தை கவர்ந்த மகிழ்

Trending News