வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தல தீபாவளி கொண்டாட ஆசையாக இருந்த மகாலட்சுமி.. திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவீந்தர்

தயாரிப்பாளர் ரவீந்தர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இணையத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது இவர்களது திருமணம். இதைத்தொடர்ந்து இவர்களே பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வந்தனர்.

மிகப்பெரிய திரை நட்சத்திரங்களான நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் கூட இவ்வளவு பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆனால் யாரும் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் இவர்களது திருமணம் நடந்ததால் இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

Also Read :என்னது நயன்தாராவுக்கும் குழந்தைக்கும் சம்பந்தம் இல்லையா? திடுக்கிடும் தகவலை வெளியிட்ட டாக்டர்

இந்நிலையில் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான். மேலும் மகாலட்சுமிக்கு ஒரு மகன் உள்ளார். இந்த சூழலில் மகாலட்சுமி, ரவிந்தர் இருவருக்கும் இது தல தீபாவளி. இதை பிரம்மாண்டமாகக் கொண்டாட வேண்டும் என்ற ஆசையில் இருவரும் இருந்துள்ளனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக ரவீந்தருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தல தீபாவளி கொண்டாட வேண்டிய நேரத்தில் மருத்துவமனையில் ரவீந்தர் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் கவலை ஏற்படுத்தி உள்ளது.

Also Read :இந்த வருட தல தீபாவளி கொண்டாடும் 8 பிரபலங்கள்.. அலப்பறை செய்ய காத்து கிடக்கும் ரவீந்தர் ஜோடி

அதுமட்டுமின்றி ரவீந்தர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதை விட இவர் செய்யும் விமர்சனத்தை தான் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் இன்று காரசாரமான விவாதங்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி செல்ல இருக்கிறது.

மேலும் இன்று முதல் எலிமினேஷனும் நடக்க உள்ளது. இந்த சூழலில் தற்போது ரவீந்தர் மருத்துவமனையில் உள்ளதால் இன்றைய எபிசோடை ரிவ்யூ செய்வரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரவீந்தர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Also Read :மகாலட்சுமியை விட, இந்த அல்வா இனிப்பு கம்பிதான்.. 90’s கிட்ஸ்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட ரவீந்தர்

Trending News