புதன்கிழமை, ஜனவரி 15, 2025

முதல் திருமண நாளை கொண்டாடிய கையோடு நடந்த கைது.. 16 கோடி மோசடி செய்த மகாலட்சுமி கணவர்

Actress Mahalakshmi: கடந்த வருடம் நடந்த நட்சத்திரங்களின் திருமணங்களில் ஒட்டுமொத்த மீடியாக்களின் கவனத்தையும் ஈர்த்த ஒரு ஜோடி தான் ரவீந்தர், மகாலட்சுமி. சொல்லாமல் கொள்ளாமல் திடீரென அப்படி ஒரு அதிர்ச்சி கொடுத்த இவர்கள் சமீபத்தில் தான் தங்கள் முதல் திருமண நாளை மிகவும் சந்தோஷமாக கொண்டாடினார்கள்.

அதற்குள்ளாகவே தற்போது ரவீந்தர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. லிப்ரா புரொடக்சன்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் இவர் மீது பாலாஜி என்பவர் புகார் கொடுத்ததை அடுத்து இந்த கைது நடைபெற்றிருக்கிறது.

Also read: நாக்கு மேல பல்ல போட்டு பேசுன ஊரு.. திருமண நாளில் பதிலடி கொடுத்த ரவீந்தர்-மகாலட்சுமி ஜோடியின் புகைப்படம்

அந்தப் புகாரில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரித்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறி ரவீந்தர் போலி ஆவணங்களை தயார் செய்து இருக்கிறார். மேலும் பாலாஜியிடம் பங்குதாரராக சேர்ந்து கொண்டால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

அதை நம்பிய அவர் 16 கோடி வரை ரவீந்தரிடம் கொடுத்து தற்போது ஏமாந்து போயிருக்கிறார். இதனால் பாலாஜி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கிறார்.

Also read: நூதன முறையில் மோசடி வழக்கில் சிக்கிய மகாலட்சுமியின் கணவர்.. பிறந்தநாள் முடிந்த கையோடு ரவீந்தருக்கு கொடுத்த ஷாக்

அதை தொடர்ந்து தற்போது ரவீந்தரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தான் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ரவீந்தர் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார்.

அதில் 16 கோடி வரை அவர் ஆட்டையை போட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே மகாலட்சுமி இவருடைய பணத்திற்காக தான் இந்த திருமணத்தை செய்தார் என்ற பேச்சு இருக்கிறது. அதில் இந்த பண மோசடி விவகாரமும் அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

Also read: மகாலட்சுமியுடன் விவாகரத்தா விளக்கி கூறிய ரவீந்தர்.. 90ஸ் கிட்ஸ் சாபம் உங்கள சும்மா விடாது

Trending News