
Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், நர்மதாவுக்கு மாமன் என்கிற முறையில் சீர் கொண்டு வந்த விஜய்யை சாரதா திட்டி சீரை திருப்பி அனுப்பி விட்டார். அத்துடன் குமரன் அம்மாவுக்கும் விஷயம் தெரிந்ததால் விஜயை கோபமாக பேசினார். இதையெல்லாம் பார்த்து கடுப்பான காவிரி, யார் வேண்டுமானாலும் என்னை திட்டுங்க அதற்கு எல்லாத்துக்கும் உரிமை இருக்கிறது.
ஆனால் அதற்காக அவரை திட்டுவதை நான் பார்த்துக் கொண்டே இருக்க முடியாது என்று விஜய்க்காக குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார். பிறகு சாரதா, ஓனருக்கு சாப்பாடு கொடுத்துட்டு வர சொல்லி காவிரியிடம் சாப்பாடு கொடுத்து அனுப்புகிறார். ஆனால் வீட்டின் ஓனர் விரதம் என்று சொல்லிய நிலையில் சாப்பாட்டை திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.
ஆனாலும் இந்த ஓனருக்கு எப்படி இவர்கள் கணவன் மனைவி, இப்ப ஏன் பிரிந்திருக்கிறார்கள் என்ற உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் விஜய் இடம் கேட்கலாம் என்று முடிவு பண்ணி விட்டார்கள். அத்துடன் காவிரி அந்த சாப்பாட்டை வீட்டிற்கு கொண்டுட்டு போகாமல் விஜய் இடம் கொடுத்துட்டு போகிறார். போகும் பொழுது தேவையில்லாத விஷயத்தில் நீங்கள் தலையிட்டு உங்களுடைய இமேஜை கெடுத்துக்காதீங்க.
யாருக்காகவும் நீங்கள் அவமானப்படக்கூடாது, நீங்கள் கெத்தாக இருந்தால் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் இனி உங்களுடைய இமேஜை விட்டு கீழே இறங்காது என்று அட்வைஸ் பண்ணிவிட்டு போய்விடுகிறார். விஜய் காவேரி கொடுத்த சாப்பாடை சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது வீட்டின் ஓனர் ரெண்டு பேரும் வந்து விஷயத்தை கேட்கிறார்கள்.
அதற்கு விஜய் எந்த உண்மையையும் சொல்லாமல் ஒரு சின்ன ட்ராமா மாதிரி பொய் சொல்லி ஏமாற்றி விடுகிறார். இதனால் கடைசி வரை அந்த வீட்டின் ஓனருக்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரியாமல் போய்விடுகிறது. பிறகு வீட்டுக்குள் வந்த காவிரி, நம்மளால்தான் விஜய் ரொம்பவே கஷ்டப்படுகிறார். இனியும் நாம் இங்கே இருந்து அவரை கஷ்டப்படுத்த வேண்டாம். பேசாமல் அவருடைய போய்விடலாமா என்று முடிவெடுக்கிறார்.
ஆனாலும் இந்த வெண்ணிலா பிரச்சனைக்கு ஒரு முடிவு தெரியாமல் போனால் தேவையில்லாமல் விஜய்க்கு தான் தொந்தரவாக இருக்கும். அதனால் வெண்ணிலா சரி ஆகட்டும் அதுவரை நாம் கொஞ்சம் காத்து இருப்போம் என்று முடிவெடுத்து விடுகிறார். பிறகு விஜய், நர்மதாவுக்காக வாங்கிட்டு வந்த செயினை யாருக்கும் தெரியாமல் காவிரி நர்மதா கழுத்தில் போட்டு விடுகிறார்.
நர்மதாவின் செயினை பார்த்த சாரதா யார் கொடுத்தார் என்று கேட்கிறார். அதற்கு நர்மதா, காவிரி அக்கா தான் போட்டுவிட்டார் என்று சொல்லிவிடுகிறார். உடனே சாரதா இது மூன்று பவுன் இருக்கும், அவ்ளோ பணம் உன்னிடம் ஏது என்று கேட்டு பிரச்சினை பண்ண ஆரம்பித்து விட்டார். இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் காவிரி முழித்துக் கொண்டிருக்கிறார்.