விஜய் சேதுபதியின் 50-ஆவது படமாக ரிலீசான மகாராஜா படம் தமிழ்நாட்டில் வசூல் வேட்டை நடத்தியது. மேலும் பாண் இந்தியா ரேஞ்சுக்கு இந்த படத்துக்கு நல்ல விமர்சனமும் கிடைத்தது. விஜய் சேதுபதி கேரியரில் தி பெஸ்ட் படம் என்றே கூறலாம். படம் தமிழ்நாட்டில் 100 கோடி கிளப்பில் இணைந்தது மட்டுமின்றி OTT-யிலும் ட்ரெண்டிங் ஆனது.
இந்த நிலையில், மகாராஜா படத்தை சமீபத்தில் சீனாவில் 40,000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. அங்கு பொதுவாக இந்தியன் படங்கள் வரவேற்பு பெறுவது அரிது தான். ஏன் என்றால் அங்குள்ள ஆடியன்ஸ் பெரும்பாலும் டிராமா பார்த்து பழகியவர்கள். அவர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவது என்பது பெரும் சாதனை தான்.
இதுவரை நடத்திய வசூல்
இப்படி இருக்க, இதற்க்கு முன்பு சீனாவில் நல்ல வரவேற்பை பெற்று 1000 கோடி வசூல் வேட்டை நடத்திய இந்தியா படம் என்றால், அது நிச்சயம் அமீர் கானின் தங்கள் படம் தான். இந்த படம் இந்தியாவில் நல்ல விமர்சனம் பெற்றதை தொடர்ந்து, வெளிநாடுகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. அப்படி சீனாவில் மட்டும் 1000 கோடி வசூல் வேட்டை நடத்தியது.
தற்போது தமிழ் படம் அதுவும் நல்ல கன்டென்ட் படமாக புகழ்பெற்ற மகாராஜா படமும் சீனாவில் 40,000 திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளது. பிரிமியர் ஷோ போட்டு மக்களிடம் வரவேற்பு பெற முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில், இத்தனை திரையரங்கில் வெளியாகியுள்ள, படம் இதுவரை 2 கோடி தான் வசூல் செய்துள்ளது.
சீனாவில் டல் அடிக்கிறது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் அந்த ஆடியன்ஸிடம் நமது ஆர்ட்டிஸ்ட் ஒருவரின் படம் இந்த அளவுக்கு வசூல் செய்ததே ஒரு பெரும் சாதனையாக தான் பார்க்க முடிகிறது. இது போன்ற படங்களை தேர்வு செய்து தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்தால் அவர் நம்பர் 1 க்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது.