செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

பிறந்த குழந்தையுடன் எமோஷனல் புகைப்படம் வெளியிட்ட மகத்.. 1 மில்லியனை தொட போகும் லைக்ஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் மகத். நடிகர் சிம்புவின் நண்பரான இவர் தல தளபதி ஆகிய இருவருடனும் நடித்துள்ளார். தற்போது இவன்தான் உத்தமன் என்ற படத்தில் சோலோ ஹீரோவாக நடித்து வருகிறார்.

சமீபத்தில்தான் மகத் தனது காதலியை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் மகத் எப்போதுமே உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர்.

பெரிய ஹீரோக்கள் கட்டுமஸ்தான உடல் கட்டுடன் சிக்ஸ்பேக் வைத்துக் கொண்டால் விரைவில் பேமஸ் ஆகி விடுவார்கள். ஆனால் மகத் சிக்ஸ்பேக் வைத்து இருந்தாலும்  தற்போது வரை ஏனோ ஃபேமஸ் ஆகவில்லை. அதற்கு பிக்பாஸில் யாஷிகா உடன் அடித்த கூத்து கூட காரணமாக இருக்கலாம்.

மகத் இந்த வருடம் மட்டும் கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, இவன்தான் உத்தமன் , காதல் கண்டிஷன் அப்லே, சைக்கிள் போன்ற படங்களில் நடித்து வருகிறார். திருமண வாழ்க்கையில் அடுத்த அடி எடுத்து வைத்துள்ளார், பச்சிளம் குழந்தையுடன் எமோஷனல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் அதிக வரவேற்பு கிடைப்பது மட்டுமில்லாமல், லைக்ஸ் குவிந்த வண்ணம் உள்ளன.

mahat-baby
mahat-baby

Trending News