சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

புது அவதாரம் எடுக்கும் மாஸ்டர் மகேந்திரன்.. ஒரே நாளில் மிரட்டலாக வெளிவந்த 3 பட போஸ்டர்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். தமிழ் சினிமாவில் பரிச்சயமான இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. விஜயின் மாஸ்டர் படத்தில் தனது சிறப்பான நடிப்பினால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மகேந்திரனின் பிறந்த நாளன்று அவர் நடித்துள்ள 3 படங்களின் போஸ்டர் வெளியாகியுள்ளது. மகேந்திரன் கதாநாயகனாக நடித்து அருண் கார்த்திக் இயக்கியுள்ள ரிப்பப்பரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

ripupbury
ripupbury

பீப்பிள் புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில் பிரசாத் நாகராஜ் இயக்கியுள்ள திரில்லர் படமான
அமிகோ கேரேஜ் என்ற படத்தின் போஸ்டரும் வெளியாகி உள்ளது. இப்படத்தின் மகேந்திரன் கார் மெக்கானிகாக நடித்திருப்பது போன்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.

amigo garage
amigo garage

மகேந்திரனின் வித்தியாசமான கெட்டப்பில் வெளியாகியுள்ளது கரா படத்தின் போஸ்டர். அவதார் இயக்கும் கரா படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி, மகேந்திரன் பிறந்தநாள் அன்று வெளியிட்டுள்ளார். மூன்று படங்களில் ஹீரோவாக நடித்துள்ள மகேந்திரன் படங்களின் போஸ்டர் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

karaa
karaa

Trending News