வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

திமுகவில் இணைந்த மக்கள் நீதி மையம் மகேந்திரன்.. வெளிப்படையாக அவரே கூறிய காரணம்

திமுகவில் இணைந்த மக்கள் நீதி மகேந்திரன் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலை அடுத்து நடிகர் கமலஹாசனின் “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் பல்வேறு நிர்வாகிகளும் மற்ற கட்சிகளை நோக்கி சென்று வருகிறார்கள்.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஐ.ஜே.கே மற்றும் அ.இ.ச.ம.க உடன் கூட்டணியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.

தலைவர் கமல்ஹாசனும் கடைசி நிமிடம் வரை காத்திருந்தும் வெற்றியை வசமாக்க முடியவில்லை. இந்த நிலையில் தொடர்ந்து வெளியேறி வரும் மக்கள் நீதி மய்ய பிரமுகர்களில் மகேந்திரனும் இணைந்துள்ளார்.

mahendran
mahendran

தளபதி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மகேந்திரன் தனது அரசியல் பயணம் தொடரும் மக்களுக்கு நலன் செய்வதற்கு தான் கடமைப்பட்டுள்ளதாக கூறினார்.

Trending News