சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல்வேறு படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தான் நடிகர் மகேந்திரன். இவர் கடைசியாக மாஸ்டர் படத்தில் குட்டி பவானி என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய அட்டகாசமான நடிப்பை வெளிகாட்டியிருப்பார். அதன்பின்பு தற்போது தமிழ், தெலுங்கு போன்றவற்றின் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
அந்த வகையில் சிதம்பரம் ரயில்வே கேட் மற்றும் நம்ம ஊருக்கு என்ன ஆச்சு, அர்த்தம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் அர்த்தம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே அர்த்தம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபடி நடிகர் மகேந்திரன் மற்றும் அந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஷ்ரத்தா தாஸ் ஆகியோர் படத்தைப் பற்றி பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
காதல் மற்றும் திகில் நிறைந்த படம்தான் அர்த்தம். குழந்தை நட்சத்திரமாகவும், எதிர்மறையான கதாபாத்திரங்களிலும் நடித்திருந்த மகேந்திரன், தற்போது முதல் முதலாக திகில் படத்தில் நடித்துக் கொண்டிருப்பது பெரும் மன நிறைவைத் தருவதாக மகேந்திரன் கூறினார். அதைப்போல் ஷ்ரத்தா தாஸ் ஒரு மனநிலை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் மாயா என்ற பெயரில் இந்தப்படத்தில் நடிக்கிறாராம். இந்தப் படத்தில் வில்லனாக அஜய் நடிக்கிறார்.
அர்த்தம் படத்தில் தொடர்ச்சியாக கொலைகள் இருக்கும். அதனை விசாரணை செய்வதன் மூலம் படத்தில் நிறைய திகில் காட்சிகளை காணலாம். அத்துடன் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் அனைவரும் ஒரே வீட்டில் கூடியிருந்தது வித்தியாசமான அனுபவத்தை தந்ததாகவும், எல்லா கதாபாத்திரங்களும் வெவ்வேறு கண்ணோட்டங்களை கொண்டதால் சுவாரசியம் நிறைந்த படமாக அர்த்தம் திகழும் என்று ஷ்ரத்தா தாஸ் கூறியிருக்கிறார்.
அதேபோல் இந்தப் படத்தை இயக்குனர் மணிகந்த், ஏன் மூன்று மொழிகளில் உருவாக்கினார்? என்றால், தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற முன்று மொழி ரசிகர்களுக்கும் மகேந்திரன் மற்றும் ஷ்ரத்தா தாஸ் பரிச்சயமானவர்கள் என்பதால், இதனைக் கருத்தில் கொண்டே அர்த்தம் படத்தை முன்று மொழிகளில் உருவாக்க இயக்குனர் முடிவு செய்துள்ளனர்.
மேலும் திகில் படம் என்றாலே, ஒளிப்பதிவு முக்கிய பங்கு வகிக்கும். ஏனென்றால் காட்சிகள் பார்வையாளர்களுக்கு இடையே எதிர்பார்க்கக்கூடிய அச்சத்தை தூண்ட வேண்டும் என்றால், அதற்கு படத்தின் ஒளிப்பதிவு தான் மிகப்பெரிய நம்பிக்கையாக அமையும்.
ஆகையால் அர்த்தம் படத்தின் ஒளிப்பதிவாளர் பவன் சென்னா இயற்கை ஒளி மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்களுடன் செயல்படுகிறார். எனவே மகேந்திரன் நடிக்கும் அர்த்தம் படத்தைப் பற்றிய தகவல்களை அறிந்த ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் இதுகுறித்து அதிகமாக பேசி வருகின்றனர்.