Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மகேஷை கொலை செய்ய வேண்டும் என்ற அரவிந்தின் திட்டம் செல்லுபடி ஆகவில்லை.
அன்பு மகேசை காப்பாற்றி விட்டான் என்றாலும் அதற்கு அடுத்து நடந்த விஷயம் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அன்புக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கும் மகேஷ்
பாதி மயக்கத்தில் இருக்கும் மகேஷ் நடக்கும் அனைத்தையும் கவனித்திருப்பான், அன்புவை புரிந்து கொள்வான் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகேஷ் கண் விழித்ததும் போலீஸ்காரர்களிடம் அன்பு தான் என்னை ஆளை வைத்து கொல்ல முயற்சி செய்தது என்று வாக்குமூலம் கொடுக்கிறான்.
இந்த விஷயம் ஆனந்திக்கு பெரிய அளவில் கோபத்தை ஏற்படுத்துகிறது. மகேஷிடம் போய் நியாயம் கேட்கப் போகிறேன் என்று போகும் ஆனந்தியை காவல்துறையினர் தடுத்து நிறுத்துகிறார்கள்.
மகேஷ் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தின் படி அன்பு கைதாக கூட வாய்ப்பு இருக்கிறது. அன்பு கைதானால் ஆனந்தி மற்றும் அவனுடைய அம்மா லலிதாவின் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்பது பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் மகேஷ் உண்மையை தெரிந்து கொண்டு அன்பு இல்லாமல் அரவிந்த் மற்றும் மித்ரா வேறு என்ன திட்டம் போடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள கூட இப்படி ஒரு வாக்குமூலத்தை கொடுத்து இருக்கலாம்.
அன்புவை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற மகேஷ் ஒருத்தனால் மட்டும் தான் முடியும். மகேஷ் உண்மையை தெரிந்து கொண்டு அன்பு வை காப்பாற்றுகிறானா என பொறுத்திருந்து பார்க்கலாம்.