வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சிங்கப்பெண்ணில் காதலர்களாய் கை கோர்த்த அன்பு-ஆனந்தி.. மித்ராவை போட்டு பொளந்தெடுத்த மகேஷ்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் காதலர்களாய் இணைய வேண்டும் என்பதுதான் சீரியல் ரசிகர்களின் பெரிய ஆசையாக இருந்தது.

அந்த ஆசையை நிறைவேற்றி இருக்கிறார் சீரியல் இயக்குனர். ஆனந்திக்கு அன்பு தான் அழகன் என்று தெரிஞ்சு போச்சு, இனி என்ன நடந்தாலும் பரவாயில்லை என்பதுதான் இவ்வளவு நாள் எதிர்பார்த்தது. நேற்று அன்பு வைத்தேடி பஸ் ஸ்டாண்டுக்கு போன ஆனந்தி பஸ்ஸை நிப்பாட்டி அன்புவை கீழே இறங்க சொல்கிறாள். அன்புவை நேருக்கு நேராக பார்த்து அழகன் இருக்கிறானா? இல்லையா என்று கேட்கிறாள்.

காதலர்களாய் கை கோர்த்த அன்பு-ஆனந்தி

அன்பு இல்லை என்று சொல்லவும் அவன் கன்னத்தில் பளார் என்று அடிக்கிறாள். மறுபடியும் அழகன் இருக்கிறானா இல்லையா என்று கேட்கிறாள் அதற்கும் அன்பு இல்லை என்று தான் பதில் சொல்கிறான். மீண்டும் அன்பு ஆனந்தியிடம் அடி வாங்கினான்.

அதன் பின்னர் செயினை எடுத்துக்காட்டி அப்போ இது என்ன என்று கேட்கிறாள். நீ தான் அழகன் என்று என்னிடம் சொல்லி இருந்தால் நான் உன்னை ஏற்றுக்கொள்ளாமல் போவேனா, ஏன் இப்படி செஞ்ச என கேட்கிறாள். இவ்வளவு நாள் அழகனை நான் காதலிக்கிறேன் என நிறைய பேர் கேட்டு இருக்கிறார்கள். அதை எதற்குமே என்னிடம் பதில் இருந்ததில்லை.

ஆனால் இப்போது சொல்கிறேன் நான் உன்னை காதலிக்கிறேன் என சொல்கிறாள். உடனே அன்பு அழுது கொண்டே அவளை அனைத்து கொள்கிறான். அதே நேரத்தில் மகேசின் அம்மா, மித்ராவுக்கு போன் பண்ணி அன்பு தான் அழகன் என்று மகேஷை நீ நம்ப வச்சியா, மகேஷ் வீட்டில் ரொம்பவும் சாதாரணமாக நடந்து கொள்கிறானே என்று கேட்கிறார்.

அதற்கு மித்ரா அன்பு மற்றும் ஆனந்தி மீது மகேஷ் பயங்கர கோபத்தில் இருக்கிறான். போதாத குறைக்கு ஆனந்தி இன்னைக்கு கம்பெனியில் கருணாகரனை தள்ளிவிட்டு இரும்பு கம்பியால் குத்த போயிருக்கிறாள், இதை எப்படி மகேஷிடம் சொல்வது என யோசித்துக் கொண்டிருக்கிறேன் என சொல்கிறாள்.

உடனே மகேஷின் அம்மா அன்பு மீதுள்ள காதலால் தான் ஆனந்தி கருணாகரனை தாக்கினாள் என்று சொல்லி என சொல்லிக் கொடுக்கிறார். மித்ரா கருணாகரனை கையோடு கூட்டிக் கொண்டு வந்து திட்டமிட்டபடி ஆனந்தியை பற்றி போட்டுக் கொடுக்கிறாள்.

உடனே மகேஷ் ஒரு சிலரை ரொம்ப நம்பி இடம் கொடுத்துட்டேன் என்று கோபத்தோடு சொல்கிறான். ஆனந்திக்கு போன் பண்ணுகிறான், ஆனால் ஆனந்தி எடுக்கவில்லை. அன்புவை கோயிலுக்கு கூட்டிட்டு போன ஆனந்தி நீதான் அழகனாய் இருக்கும்போது ஏன் அழகனே இல்லை என்று என்னிடம் பொய் சொன்னாய், இந்த முறையாவது என்னிடம் மறைக்காமல் முழு உண்மையையும் சொல் என்று கேட்கிறாள்.

மகேஷ் ஆனந்தியை காதலிப்பதை பற்றி அன்பு சொல்வது போல் நேற்றைய எபிசோடு முடிந்து இருக்கிறது. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி வா நம்ம ரெண்டு பேரும் போய் மகேஷ் சார்கிட்ட உண்மையை சொல்லிடுவோம் என கூட்டிட்டு போகிறாள்.

ஆனால் சரியாக அதே கோவிலுக்கு மகேஷ் மற்றும் மித்ரா வருகிறார்கள். மித்ரா கூட மகேஷ் சார் வருகிறார் இப்போ எப்படி இந்த விஷயத்தை சொல்றது என ஆனந்தி யோசிக்கிறாள். அப்போது அந்த இடத்திற்கு வந்த மித்ரா என்ன மகேஷ் பாத்துட்டு இருக்க அவனை அடி என்று சொல்கிறாள். ஆனால் மகேஷ் எதிர்பாராத விதமாக மித்ராவை கன்னத்தில் பளார் என்று அடித்து விடுவதோடு இந்த ப்ரோமோ முடிந்து இருக்கிறது.

Trending News