புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தேரை இழுத்து தெருவில் விட்ட மகேஷ்.. ஆனந்தி, அன்புக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் இன் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே ஆனந்தி மற்றும் அன்புக்கு நடுவில் மகேஷ் புகுந்து தேவையில்லாமல் ஆட்டையை கலைத்து விட்டான்.

போதாத குறைக்கு ஆனந்தியின் ஹாஸ்டலுக்கே போய் போலி அழகனை நம்பி ஆனந்தி ஏமாந்ததை பற்றி புட்டு புட்டு வைத்து விட்டான். ஹாஸ்டல் வார்டன் ஆனந்தி மற்றும் அவளுடைய தோழிகள் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார்.

இவர் ஏதோ ஏடாகூடமாக செய்யப் போகிறார் என எல்லோரும் எதிர்பார்த்தது போல் நடந்து விட்டது. வார்டன் ஆனந்தி வீட்டுக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை எல்லாம் சொல்வது போல் இன்றைய ப்ரோமோ அமைந்திருக்கிறது.

ஆனந்தி, அன்புக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து

உண்மையிலேயே வார்டன் ஆனந்தி பிரச்சினையில் சிக்கியதை பற்றி அவருடைய சொல்லிவிட்டால் அடுத்த கட்டமாக ஆனந்தி சென்னையை விட்டு காலி பண்ணும் நிலைமை கூட ஏற்படலாம். அதே நேரத்தில் போலீசால் கைது செய்யப்பட்ட நந்தாவை இன்னும் காட்டவில்லை.

நந்தா நான் ஸ்டேஷனுக்கு வந்து வாக்குமூலம் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு போலீசார் உடன் போய் விட்டான். ஒரு பக்கம் மித்ராவுக்கு நந்தா அவளை காட்டிக் கொடுத்து விடுவானோ என்று பயம் சூழ்ந்து இருக்கிறது.

இன்னொரு பக்கம் நந்தா மேலும் சூழ்ச்சி செய்து அன்பு தான் இதற்கு எல்லாம் காரணம் என்று சொல்லக்கூட வாய்ப்பிருக்கிறது. ஆனந்தியும் யார் என்ன சொன்னாலும் நம்பும் கேரக்டர் என்பதால் அன்பு வை மீண்டும் சந்தேகப்படுவதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

இடையில் மகேஷ் காதல் தோல்வியில் புலம்புவதால் அவருடைய அப்பா மனம் மாறி ஆனந்தியை மகேஷுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை இது பற்றி இனி வரும் வாரங்களில் தான் தெரியும்

சமீபத்தில் சிங்க பெண்ணில் நடந்த சம்பவங்கள்

Trending News