வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சிங்கப்பெண்ணில் அழகன் யாரென்று தெரிந்து கொள்ளும் மகேஷ்.. ஆனந்தி வாழ்க்கையை புரட்டி போடும் சம்பவம்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தி தன்னுடைய காதலை புரிந்து கொள்ள தடையாக இருப்பது அழகன் தான் என மகேஷுக்கு கோபம் இருந்து கொண்டே இருக்கிறது.

நந்தாவின் மரணத்திற்கு பிறகு அழகன் என்ற கேரக்டர் இல்லை என மகேஷ் நினைத்துக் கொண்டிருந்தான். மகேஷ் காதலுக்காக அன்பும் தன்னுடைய காதலை மறைத்துக் கொண்டு வெளிநாடு செல்ல புறப்பட்டு விட்டான்.

மகேஷ் தன்னுடைய காதலைப் பற்றி வீட்டில் சொல்லப் போகிறான் என தெரிந்ததும் மித்ரா என்ன செய்வது என தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் அவளுக்கு அழகனை மீண்டும் கொண்டு வந்து அன்பு தான் அந்த அழகன் என நம்ப வைத்தால் எப்படி இருக்கும் என்ற யோசனை வந்தது.

அழகன் யாரென்று தெரிந்து கொள்ளும் மகேஷ்

அதற்கான திட்டத்தையும் சிறப்பாக செய்து முடித்து விட்டாள். மேலும் அன்பு தான் அந்த அழகன் என்று தெரிய வைக்க மகேஷ் மூளையை சலவை செய்ய ஆரம்பித்து விட்டாள். அழகன் யார் என கண்டுபிடித்து அவனை ஒழித்து ஆக வேண்டும் என முடிவு செய்து விட்டான் மகேஷ்.

ஒரு வேளை அழகன் கம்பெனியில் இருக்கும் ஆளாக இருப்பானோ என மகேஷ் மனதில் சந்தேகத்தை தூண்டி விட்டாள் மித்ரா. கம்பெனியில் வேலை செய்யும் எல்லோரையும் அழைத்து கம்பெனியில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என்று ஒரு கடிதம் எழுதிக் கொடுங்கள் என மகேஷ் கேட்கிறான்.

கருணாகரன், அரவிந்த் உட்பட எல்லோரும் கடிதத்தை எழுதிக் கொடுக்கிறார்கள். உடனே ரூமுக்கு வந்து மித்ரா மற்றும் மகேஷ் இருவரும் அழகன் எழுதிய கடிதத்தோடு மற்றவர்களின் கடிதத்தை ஒப்பிட்டுப் பார்த்து கையெழுத்தை சரி பார்க்கிறார்கள்.

யாருடைய கையெழுத்துமே அழகன் கையெழுத்து போல் இல்லை என மகேஷ் ரொம்பவே டென்ஷன் ஆகிறான். உடனே மித்ரா எனக்கு அன்பு மேல் சந்தேகம் இருக்கிறது எதற்கும் அவனுடைய கையெழுத்தையும் நாம் சரி பார்க்கலாம் என்று சொல்கிறாள்.

உடனே மகேசுக்கு கோபம் வந்து விடுகிறது. அன்பு அழகன் இல்லை என்பதை உன்னிடம் நிரூபிப்பதற்காகவாவது நான் இதை செய்கிறேன் என சொல்கிறான். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முத்து மூலம் அன்பு கடிதம் எழுதி அனுப்புவது போல் இருக்கிறது.

மேலும் அன்பு தான் அழகன் என மகேஷ் கண்டுபிடிப்பது போலவும், ஏற்கனவே அன்பு மற்றும் ஆனந்தி குடோனில் ஒன்றாக தூங்கிக் கொண்டிருந்தது, மொட்டை மாடியில் அன்புவை ஆனந்தி கட்டிப்பிடித்து நின்று கொண்டிருந்தது என எல்லாத்தையும் நினைத்துப் பார்த்து ஒரு மிருகம் போல் மகேஷ் கத்துவது போல் அந்த வீடியோ முடிந்திருக்கிறது.

ஆனந்திக்கு முன்னால் அன்பு தான் அழகன் என மகேஷ் கண்டுபிடிக்கிறானா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News