சனிக்கிழமை, பிப்ரவரி 22, 2025

சிங்கப்பெண்ணில் எல்லை மீறும் மகேஷ், பொங்கி எழுந்த ஆனந்தி.. அன்புவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் கருணாகரன்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியனின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

பார்வதியும், மித்ராவும் என்ன நடக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அதை கச்சிதமாக முடித்து இருக்கிறார்கள்.

மகேஷ் ஒரு மிகப்பெரிய கம்பெனியின் ஓனர் என்பதால் தான் ஆனந்தி அவனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள் என்று மகேஷுக்கு தோன்றுகிறது.

எல்லை மீறும் மகேஷ், பொங்கி எழுந்த ஆனந்தி

இதனால் ஆனந்திக்கு ஒரு பெரிய பொறுப்பை கொடுத்து அவளுக்கென்று ஒரு தனி கேபினையும் கொடுக்கிறான். இது முழுக்க முழுக்க மகேஷின் அம்மா பார்வதியின் திட்டம் என்பது நன்றாகவே தெரிகிறது.

ஆனந்தி கம்பெனிக்கு வந்ததும் மகேஷ் அவளை அந்த கேபினுக்கு அழைத்து செல்கிறான். அவளுக்கு பெரிய பதவி கொடுத்ததை சொன்னதோடு அவளை கட்டி பிடிக்கவும் முற்படுகிறான்.

இது ஆனந்திக்கு பெரிய அளவில் கோபத்தை ஏற்படுத்துகிறது. ரொம்பவும் கோபப்பட்டு அன்பு தான் அழகன், அழகன் தான் அன்பு நான் அவனை தான் காதலிக்கிறேன் என்று சொல்கிறாள்.

இதனால் டென்ஷனான மகேஷ் உடனே வெளியே வந்து அன்புவை துரோகி என்று சொல்லி அடிக்கிறான்.

அது மட்டும் இல்லாமல் கருணாகரனிடம் சொல்லி அன்புவை கம்பெனியை விட்டு வெளியே அனுப்ப சொல்கிறான்.

ஆனந்தியின் கையை தரதரவென இழுத்து அவளை உள்ளே கூட்டி செல்வது போல் இந்த ப்ரோமோ முடிந்திருக்கிறது.

இது நிஜமாகவே நடக்கப் போகிறதா அல்லது பார்வதியின் கனவா என இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

Trending News