புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிங்கப்பெண்ணில் உண்மையை மறைக்கும் மகேஷ்.. அன்பு, ஆனந்தியை க்ளோஸ் பண்ண போட்ட பலே திட்டம்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய எபிசோடு ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அன்பு வீட்டில் ஆனந்தி இருப்பது தான். தான் ஊரில் இல்லாத நேரத்தில் ஆனந்தி வீட்டிற்கு வந்தது தெரிந்தால் அன்புவின் அம்மா ருத்ர தாண்டவம் ஆடி விடுவார்.

ஆனந்தியை அவன் அம்மா கைகளில் மாட்ட விடாமல் எப்படி அன்பு காப்பாற்றப் போகிறான் என்பதுதான் பெரிய கேள்வி. அது மட்டும் இல்லாமல் மகேஷ் அடுத்த கட்டமாக ஆனந்தியை எங்கே கூட்டிக்கொண்டு போவான் என்பதும் பெரிய சந்தேகமாக தான் இருக்கிறது.

உண்மையை மறைக்கும் மகேஷ்

இரவில் ஆனந்தியை வெளியே கூட்டிட்டு போன மகேஷ் அவளை எங்கே வைத்திருக்கிறான் என மித்ராவுக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. இதனால் காலையிலேயே மகேஷ் வீட்டுக்கு புறப்பட்டு போய் விடுகிறாள். அங்கு மகேஷின் அம்மா இரவு என்ன நடந்தது என்பதை மித்ராவிடம் சொல்கிறார்.

மித்ராவுக்கு மனசு போல் அப்படியே குளுகுளு என்று இருக்கிறது. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மகேஷிடம் துக்கம் விசாரிக்கிறாள். மகேஷ் ரொம்ப அசால்ட் ஆக ஆனந்தி கம்பெனியில் வேலை செய்கிறாள் என்பதால் தான் அம்மா இப்படி பேசுகிறார். கூடிய சீக்கிரமே நான் ஆனந்தியை காதலிப்பது பற்றி அம்மாவிடம் பேச போகிறேன் என்கிறான்.

அது மட்டும் இல்லாமல் ஆனந்தி இப்போது எங்கே இருக்கிறாள் என்பதை மித்ராவிடம் சொல்ல மறுக்கிறான். இந்த ரெண்டு விஷயமும் மித்ராவுக்கு தலையின் இனிய இறக்கியது போல் இருக்கிறது. அதே நேரத்தில் ஊருக்கு போன ஆனந்தியின் மற்ற ரெண்டு தோழிகளும் ஹாஸ்டலுக்கு வந்து அன்று இரவு நடந்த எல்லா விஷயத்தையும் தெரிந்து கொள்கிறார்கள்.

உடனடியாக காயத்ரியிடம் வந்து ஆனந்திக்கு இப்படி ஒரு விஷயம் நடப்பதற்கு எப்படி நீ வந்து சம்மதித்தாய் என ரொம்பவும் கோபமாக கேட்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் வார்டனிடமும் இதைப் பற்றி பேசுகிறார்கள்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அன்பு எப்படியோ ஆனந்தியை தன் வீட்டிலிருந்து வெளியில் கூட்டிக் கொண்டு வந்து விடுகிறான். பைக்கில் செல்லும் ஆனந்தி மற்றும் அன்பு வை அரவிந்த் காரில் மோதுவது போல் காட்டப்பட்டு இருக்கிறது. ஒரு வேலை இது எதிர்ச்சியாக நடந்து இருக்கிறதா, அல்லது மித்ராவின் திட்டமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News