Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. மகேஷ் கம்பெனிக்கு ஒரு பெரிய ஆர்டர் எடுத்து வருகிறான்.
அதை மூன்று நாளில் முடித்துக் கொடுக்கிறேன் என அன்பு சபதம் போடுகிறான். டெய்லர் ஒருவர் கம்மியாக இருக்கும் நிலையில் ஹவுஸ்கீப்பிங் வேலை செய்து கொண்டிருக்கும் ஆனந்தியை டெய்லர் ஆக்குகிறார்கள்.
இது மித்ரா மற்றும் கருணாகரன் இருவருக்குமே பிடிக்கவில்லை. ஒரு வழியாக உஷா மற்றும் ஆனந்திக்கு இடையே யாரு திறமையான தையல்காரர் என்ற போட்டி நடக்கிறது.
ஆனந்தியின் தலையெழுத்தை மாற்ற போகும் மகேஷ்
இதில் ஆனந்தி செய்கிறாள். ஆனந்தியை எப்படியாவது டெய்லர் ஆக விடக்கூடாது என கருணாகரன் மற்றும் மித்ரா பிளான் போடுகிறார்கள்.
ஆனந்தி பாத்ரூமில் இருக்கும் பொழுது வெளியே சோப்பு தண்ணீரை ஊற்றி விடுகிறாள் மித்ரா. வெளியில் வரும் ஆனந்தி சோப்பு தண்ணீரில் வலிக்கு கீழே விழுந்து அவளுக்கு கை காலில் அடிபட்டு விடுகிறது.
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மித்ரா கருணாகரனிடம் பிளான்ஸ் அக்சஸ் இன்னைக்கு ஆனந்தி கம்பெனிக்கு வரமாட்டாள் என்று சொல்கிறாள்.
ஆனால் ஆனந்தி சுளுக்கு பேண்டேஜ் கையில் மாட்டிக் கொண்டு ஹாஸ்டலை விட்டு வெளியில் வருவது போல் காட்டப்பட்டு இருக்கிறது.
அதே நேரத்தில் ஆனந்திக்கு கையில் அடிபட்டு இருக்கிறது என்று தெரிந்ததும் அன்பு யாழினி இடம் சொல்லிவிட்டு அவனுடைய அம்மாவின் முகத்தை கூட பார்க்காமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.
இது அன்புவின் அம்மாவுக்கு பெரிய கோபத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஆர்டரை அதிகம் பீஸ் தைத்து யார் முடிக்கிறார்களோ அவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்து இருக்கிறான் மகேஷ்.
இந்த பரிசுத்தொகை யாருக்கு உதவியாக இருக்கிறதோ இல்லையோ ஆனந்திக்கு பெரிய உதவியாக இருக்கும்.
ஏனென்றால் அவளுடைய அக்காவுக்கு அடுத்த ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது. ஒரு வேலை இதில் ஜெயித்து ஏழு லட்சம் ரூபாய் பரிசை பெற்று விட்டால் ஆனந்தியின் தலையெழுத்தே மாறிவிடும்.
அதே நேரத்தில் இன்னும் ஒன்று இரண்டு வாரங்களில் துளசியின் கேரக்டர் அறிமுகமாக இருக்கிறது.
எப்படியும் அத்தை பெண்ணை தான் கட்ட வேண்டும் என அன்புவின் அம்மா சென்டிமென்டால் அவனை தாக்கப் போவது உறுதியாகிவிட்டது.