சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

சிங்கப்பெண்ணே ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த தருணம்.. மகேஷ் காலில் விழும் ஆனந்தி, குற்ற உணர்ச்சியில் அன்பு!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

இவ்வளவு நாளாக இந்த சீரியலின் ரசிகர்கள் எதற்காக காத்து இருந்தார்களோ அந்த சம்பவம் தான் இன்று நடைபெற இருக்கிறது.

அன்பு தான் அழகன் என்று ஆனந்தி தெரிந்து கொண்டபின் இவர்கள் இருவரது காதலும் மகேஷுக்கு தெரிய வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாகவும் இருந்தது.

கிட்டத்தட்ட பல எபிசோடுகளாக இந்த விஷயம் வெளியில் தெரியாத அளவுக்கு அன்பு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தான்.

தற்போது இந்த விஷயத்தை மொத்தமாக முடித்து விட வேண்டும் என ஆனந்தி முடிவெடுத்து இருக்கிறாள்.

தன்னுடைய பிறந்தநாள் விழாவில் ஆனந்தியை காதலிப்பதை பற்றி வெளியில் சொல்லி விட வேண்டும் என மகேஷ் திட்டமிட்டு இருக்கிறான்.

மகேஷ் காலில் விழும் ஆனந்தி

அதே நேரத்தில் மித்ராவை தன் வீட்டு மருமகளாக ஏற்றுக் கொள்ள மகேஷின் அம்மா தயாராகி விட்டார்.

மகேஷ் ஆனந்தியிடம் காதலை சொல்லப்போவது தெரிந்து அன்பு ஆனந்தியை அந்த பிறந்தநாள் விழாவுக்கு வரவேண்டாம் என்று சொல்கிறான்.

ஆனால் ஆனந்தி பிறந்தநாள் விழாவுக்கு செல்ல தயாராகி விட்டாள். அது மட்டும் இல்லாமல் மகேஷிடம் எல்லா உண்மையையும் சொல்ல ஆனந்தி துணிந்து விட்டாள்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மகேஷ் தனியாக ஆனந்தியை அழைத்து சென்று காதலிப்பதை பற்றி பேசுகிறான்.

ஆனால் ஆனந்தி மகேஷ் முன்னாடி அவன் காலில் விழுந்து நான் அன்பு வைத்தான் காதலிக்கிறேன் என்று சொல்கிறாள்.

மகேஷ் ஆனந்தியை ரொம்பவும் கோபமாக பார்ப்பது போல் அந்த ப்ரோமோ முடிந்திருக்கிறது. இது நிஜமாகவே நடக்கிறதா அல்லது ஆனந்தியின் கனவா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News