சனிக்கிழமை, பிப்ரவரி 15, 2025

சிங்கப்பெண்ணில் பலநாள் உண்மையை வெளி கொண்டு வரும் மகேஷ்.. வாயடைத்து போன அன்பு-ஆனந்தி

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

அன்பு மற்றும் ஆனந்தி காதலை தெரிந்து கொண்டார் மகேஷின் அம்மா பார்வதி வேறு மாதிரியான திட்டத்தை போட்டு விட்டார்.

இந்த திட்டத்தை பற்றி மித்ராவிடமே சொல்லவில்லை. வீட்டை விட்டு வெளியில் போன மகேஷை சந்தித்து ஆனந்தியை திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொல்கிறார்.

வாயடைத்து போன அன்பு-ஆனந்தி

இதனால் மகேஷுக்கு அவனுடைய அம்மா மீது இருக்கும் கோபம் மொத்தமாய் மறைந்து விட்டது.

அடுத்த நாளே கம்பெனியில் வேலை செய்யும் அத்தனை பேரையும் கூப்பிட்டு ஆனந்தி தான் என்னுடைய மருமகள் என்று அறிவிக்கிறார்.

இது ஆனந்திக்கு பெரிய அதிர்ச்சியாக அமைகிறது. என்னை கேட்காமலேயே நீங்க எப்படி எல்லாருடைய முன்னாடியும் இதை சொல்லலாம் என முதல் தடவை ஆனந்தி எதிர்த்து பேசுகிறாள்.

உடனே மகேஷ் நான் ஏற்கனவே உன் வீட்டில் போய் பெண் கேட்டு விட்டு வந்து விட்டேன். உங்க அப்பாவும் சம்மதம் சொல்லிவிட்டார் என்ன சொல்கிறான்.

இது அன்பு ஆனந்தி இருவருக்குமே தலையில் இடியை இறக்கியது போல் இருக்கிறது. இனி ஆனந்தி அவளுடைய அப்பாவிடம் தன்னுடைய காதலை பற்றி சொல்கிறாளா இல்லை அப்பாவின் முடிவை ஏற்றுக் கொள்கிறாயா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News