வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 21, 2025

சிங்கப்பெண்ணில் வார்டனை லாக் பண்ணிய மகேஷ்.. கடைசி முயற்சியிலும் தோல்வி அடைந்த அன்பு-ஆனந்தி

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஒரு வழியாக அன்பு மற்றும் ஆனந்தி காதலிப்பது தெரிந்து விட்டது.

அதே நேரத்தில் ஆனந்தி மற்றும் மகேஷின் திருமணத்திற்கு ஓகே சொல்லி தன் பங்குக்கு திரியை கொளுத்தி விட்டு இருக்கிறார் பார்வதி.

நேற்றைய எபிசோடில் ஆனந்தி வார்டனிடம் மகேஷை வர சொல்லி எல்லா உண்மையும் சொல்லிடுங்க மேடம் என்று அழுகிறாள்.

வார்டனை லாக் பண்ணிய மகேஷ்

வார்டனும் மகேஷ் போன் பண்ணும் போது ஹாஸ்டலுக்கு வர சொல்கிறார். இதை கேட்டுக் கொண்டிருக்கும் மித்ரா அதை பார்வதியிடம் சொல்கிறாள்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வார்டன் ஆனந்தியை பற்றி மகேஷிடம் பேச தொடங்குகிறார்.

ஆனால் வார்டன் பேச ஆரம்பிப்பதற்குள்ளையே மகேஷ் ஆனந்தி இல்லனா நான் செத்துடுவேன் என்று சொல்லி விடுகிறான்.

இது வார்ரனுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது. அதனால் அன்பு மற்றும் ஆனந்தியின் காதலைப் பற்றி மகேஷிடம் சொல்லாமல் விட்டு விடுகிறார்.

ஆனந்தி வார்டனிடம் மகேஷ் சாரிடம் சொன்னீங்களா மேடம் என கேட்கும் போது மகேஷ் சொன்ன வார்த்தையை சொல்கிறார். இதனால் அன்பு மற்றும் ஆனந்திக்கு பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது.

அவர்கள் கையில் வைத்திருந்த கடைசி முயற்சியும் இப்போது தோல்வியில் முடிந்திருக்கிறது. இனி தங்களுடைய காதலில் ஜெயிக்க அன்பு மற்றும் ஆனந்தி என்ன செய்யப் போகிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News