வெள்ளிக்கிழமை, டிசம்பர் 20, 2024

சிங்கப்பெண்ணில் அம்பலமாக போகும் அன்பு-ஆனந்தி காதல்.. கேள்விக்குறியான கோகிலாவின் கல்யாணம்?

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தி எப்படியோ போட்டியில் ஜெயித்து ஏழு லட்சம் பரிசை வாங்கி விட்டாள்.

ஆனால் அந்த சந்தோஷம் நீடிக்காத அளவுக்கு அவளுக்கு அடுத்தடுத்து பிரச்சனைகள் வர காத்திருக்கிறது.

இந்த போட்டியில் ஆனந்தி ஜெயிக்க அன்பு எந்த அளவுக்கு போராடினானோ அதே அளவுக்கு மகேஷ் போராடினான்.

அம்பலமாக போகும் அன்பு-ஆனந்தி காதல்

இரண்டு பேருமே ஆனந்தியின் மீது காட்டும் அன்பில் சளைக்காமல் இருக்கிறார்கள். அன்புவின் பாசம் மற்றும் அக்கறையை ஆனந்தியால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடிகிறது.

ஆனால் மகேஷ் காட்டும் அன்பிற்கு, திருப்பி அவனை ஏமாற்றப் போகிறோம் என்பது ஆனந்திக்கு பெரிய மன உறுத்தலை கொடுக்கிறது.

இதனால் எப்படியாவது மகேஷிடம் நாம் காதலிப்பதை சொல்லிடுங்க அன்பு என்று ஆனந்தி அன்பு விடம் சொல்லுகிறாள்.

அதே நேரத்தில் ஆனந்திக்காக மகேஷ் ஏழு லட்சம் பரிசை அறிவித்தது அன்புக்கு உறுத்தலாக இருக்கிறது. மேலும் ஹவுஸ் கீப்பிங் வேலையில் இருந்து இப்போது ஆனந்தி டெய்லராக மாறி இருக்கிறாள்.

இதனால் மித்ரா மற்றும் கருணாகரன் இருவரும் அடிபட்ட பாம்பாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எந்த நேரம் ஆனந்தியை கவுக்க என்ன வேலை செய்ய காத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

ஏழு லட்சம் இருந்தால் போதும் அக்கா கல்யாணத்தை நடத்தி விடலாம் என ஆனந்தி நினைக்கிறாள்.

ஆனால் அதற்கு முன்பாகவே அழகப்பன் கடன் கொடுத்த சொக்கலிங்கம் வீடு தேடி வருவது போல் இன்றைய ப்ரோமோவில் காட்டப்பட்டிருக்கிறது.

ஆனந்தி கடனை அடைக்கிறாளா, கோகிலாவின் கல்யாணத்தை நடத்துகிறாளா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News