புதன்கிழமை, ஜனவரி 22, 2025

உசுர கொடுத்து விடாமுயற்சியை தாங்கிப் பிடிக்கும் லைக்கா.. முக்கோண ஈகோவால் மகிழ் திருமேனி செய்யும் அக்கப்போர்

விடாமுயற்சி படம் அக்டோபர் 31 தீபாவளி அன்று ரிலீஸ் சொல்லி இருக்கிறார்கள் ஆனால் அது பெரிய கேள்விக்குறியாக தான் பார்க்கப்படுகிறது. ராஜ்கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படமும் அதே தேதியில் தான் ரிலீஸ் என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகிறது.

அக்டோபர் 31 ரஜினியின் வேட்டையன், ராம்சரனின் கேம் சேஞ்சர் மற்றும் சூர்யாவின் கங்குவா போன்ற படங்கள் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்கிறது. இப்படி தீபாவளிக்கு மட்டுமே மூன்று பெரிய பட்ஜெட் படங்கள் துண்டை போட்டு வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் விடாமுயற்சி மற்றும் அமரன் ஆகிய இரண்டு படங்களையும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் தியேட்டர் உரிமைகளை வாங்கியுள்ளது. ஒரே நாளில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்தால் அது ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு பிரச்சனை தான். அதனால் இந்த இரண்டு படங்களில் ஒரு படம் தான் தீபாவளிக்கு வெளியாகும்.

விடாமுயற்சியா அல்லது அமரன் படமா என்பதுதான் இப்பொழுது அனைவரின் எதிர்பார்ப்பும். இதனிடையே விடாமுயற்சி படம் இன்னும் பிரச்சனைகள் தான் இருக்கிறது. அந்த படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி எதையும் விட்டுக் கொடுப்பதாக இல்லை.

முக்கோண ஈகோவால் மகிழ் திருமேனி செய்யும் அக்கப்போர்

திரிஷா, அர்ஜுன், அஜித் என அனைவரிடமும் ஓவர் ஆட்டிட்யூட் காட்டி வருகிறார் மகிழ் திருமேனி. இவருடன் சண்டை போட்ட திரிஷா மூன்று நாட்கள் படப்பிடிப்புக்கே வரவில்லையாம். திரிஷாவிற்கு சூட்டிங் என்று சொல்லிவிட்டு நீண்ட நேரம் காக்க வைக்கிறாராம். இதனால் இவர்களுக்குள் கடும் ஈகோ பிரச்சனை இருந்து வருகிறது.

அர்ஜுன் மற்றும் அஜித்திடமும் பிரச்சினை செய்து வருகிறார் மகிழ் திருமேனி. இதனால் இந்த படம் திட்டமிட்டபடி முடிக்கப்படுமா என்பது பெரிய கேள்விக்குறிதான். இரண்டு நிமிட காட்சி எடுப்பதற்கு முன் தயாரிப்பு பணி என்று இரண்டு மணி நேரம் அனைவரையும் காக்க வைக்கிறாராம் மகிழ்த்திருமேனி. இதனாலேயே நடிக்கும் ஆர்ட்டிஸ்ட் களுக்கு கடும் எரிச்சல் உண்டாகிறது. பணம் போட்டாச்சு என லைக்கா மட்டுமே விடாமுயற்சியை தாங்கிப் பிடிக்கிறது.

Trending News