புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளப்பிய அமீர்.. பிக் பாஸில் நடக்கப் போகும் முக்கிய சம்பவம்

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி துவங்கப்பட்ட 70 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் நிகழ்ச்சி முடிய உள்ளதால், இறுதிக் கட்டத்தில் இருக்கும் போட்டியாளர்கள் கடுமையாக போட்டி போட்டு கொண்டு இருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் பிரீஸ் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இதுவரை அக்ஷரா, சிபி, ராஜு, பிரியங்கா, நிரூப் உள்ளிட்டோரின் உறவினர்கள் வந்துள்ளனர். எனவே கடந்து வந்த பாதை என்ற டாஸ்க் நிகழ்ச்சி துவங்கப்பட்ட போது கொடுக்கப்பட்டாலும் வைல்ட் கார்டு போட்டியாளர்களுக்கு மீண்டும் அது நடத்தப்பட்டது.

அப்போது அமீர் மற்றும் சஞ்சீவ் இருவரும் தங்களுடைய கடினமான பாதையை சக போட்டியாளர்களிடம் பகிர்ந்துள்ளனர். அப்போது அமீர் கூறிய கதை பலரையும் உருக்கியது. மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்த அமீர், சிறுவயதில் தாய் தந்தையை இழந்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யாராவது கை கொடுக்க மாட்டார்களா ஏங்கிக் கொண்டிருந்த நிலையில், அமீருக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தை பற்றி இணையத்தில் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தன்னுடைய திறமையால் சிறிய நடன பள்ளியை துவங்கிய அமீரின் முதல் மாணவி அலைனாவின் பெற்றோர் சைஜி-அஷ்ரப் அவர்களின் குடும்பம் அமீரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. இதனால் அமீரும் அவர்களது வீட்டில் ஒரு உறுப்பினராக இருந்தது மட்டுமல்லாமல் அவர்கள் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டார்.

amir-family-cinemapettai
amir-family-cinemapettai

இதனால் அமீருக்கு புது குடும்பத்தை கொடுத்தது, வாழ்க்கையில் இருந்த குறையை தீர்த்து வைத்த சைஜி-அஷ்ரப் தம்பதியர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள், இவர்களுடன் அமீர் இருக்கும் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி தற்போது நடைபெறும் பிரீஸ் டாஸ்கின் மூலம் இந்த குடும்பம் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்து தரமான சம்பவத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர உள்ளனர்.

அத்துடன் கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் இந்த குடும்பத்தை பிக் பாஸ் வீட்டில் வரவைப்பது மூலம் விஜய் டிவி தன்னுடைய டிஆர்பியை எகிற விடப்போகிறது. இந்த சம்பவம் கூடிய விரைவில் நிகழப் போகிறது என ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Trending News