அமரன் டைட்டில் டீசர்: நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவருடைய 21வது படத்திற்கான டைட்டில் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. இது சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்ற நோக்கத்தில் வெளியிடப்பட்டாலும், நேற்றிலிருந்து சமூக வலைத்தளத்தை ஆட்கொண்டு இருப்பது மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் தான். நேற்று டைட்டில் டீசர் வெளியானதில் இருந்து, அவரைப் பற்றி பேசாத ஆட்களே இல்லை என்று சொல்லலாம்.
சிவகார்த்திகேயன் தன்னுடைய 21 வது படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமியுடன் இணைந்து பண்ணப் போகிறார் என்ற தகவல் வெளியானதுமே, அவர் அந்த படத்தில் ராணுவ வீரர் கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தியும் கசிந்தது. நேற்று வெளியான அமரன் டைட்டில் டீசரில் முகுந்த் வரதராஜ் என்ற பெயர் பேட்ஜ் ஒரு காட்சியில் காட்டப்பட்டிருக்கும். அதை பார்த்ததிலிருந்து யார் இந்த முகுந்த் வரதராஜ் என தமிழ் சினிமா ரசிகர்கள் தேடி கண்டுபிடித்து, அவரை ட்ரெண்டிங்கிலும் கொண்டு வந்து விட்டார்கள்.
ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜ் மரணம் அடைந்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆன பிறகு அவருடைய தேசப்பற்று வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்திருப்பதற்கு அமரன் பட டீமுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இந்த நிலையில் அமரன் பட டைட்டில் டீசரை பார்த்துவிட்டு மறைந்த ராணுவ வீரரின் மனைவி இந்து சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருக்கிறார், தற்போது இதுவும் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.
மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா வர்க்கீஸ்
மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா வர்க்கீஸ் தன்னுடைய பதிவில், அமரன் என்னுள் எப்போதுமே நிறைந்திருக்கும் ஒரு பெயர். ஒரு சகாப்தம் கடந்து என்னுடைய கணவரின் வாழ்க்கை மற்றும் தேசப்பற்று பற்றி வெள்ளி திரையில் பார்ப்பதற்கான நேரம் இது. அழியாத தூக்கம், எல்லையற்ற அன்பு மற்றும் மாறாத நம்பிக்கையுடன் இந்த படத்தை திரையில் பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, என்னையும், எங்கள் குழுவையும் நம்பி இந்த படத்தை கொடுத்த இந்து ரெபேக்கா மேடம் அவர்களுக்கு ரொம்ப நன்றி. மேஜர் முகந்த வரதராஜன் சார் மற்றும் அவருடைய குடும்பத்தின் தன்னலமற்ற சேவைக்கு என்றும் கடமைப்பட்டவர்களாக இருப்போம் என்று தெரிவித்திருக்கிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இப்படி ஒரு கதை களத்தை தேர்ந்தெடுத்து இருப்பதற்கு தமிழ் சினிமாவை சேர்ந்தவர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேஜர் முகுந்த வரதராஜன் மற்றும் அவருடைய மனைவி இந்து ரெபேக்கா வர்க்கீஸ் இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து திருமணம் செய்தவர்கள். திருமணம் செய்த ஐந்து வருடத்தில் அவர் தன்னுடைய கணவர் முகுந்த வரதராஜனை இழந்திருக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான திரைக்கதைகளுக்கு பட குழுவுடன் இணைந்து நிறைய உதவிகள் இந்து செய்திருக்கிறார். மேஜர் முகுந்து வரதராஜன் இறந்த பிறகு இந்து ரெபேக்கா வர்கீஸுக்கு ராணுவ பள்ளியில் ஆசிரியர் பணி கொடுக்கப்பட்டிருக்கிறது.
Also Read:அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.. ரத்தம் தெறிக்கும் சிவகார்த்திகேயனின் SK21 டைட்டில் டீசர்