வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

டைரக்டராகவும் கொடி கட்டி பறந்த மேஜர் சுந்தர்ராஜன்.. கமலை வைத்து இயக்கிய அந்த திரில்லர் மூவி

Kamal-Sundarajan: 80காலகட்டத்தில் சிவாஜியின் நண்பராய் தமிழ் சினிமாவில் களம் இறங்கி நடிகர் தான் மேஜர் சுந்தர்ராஜன். சுமார் 900க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராய் நடிப்பினை வெளிக்காட்டியும் மேலும் இயக்குனராய் கமலுடன் இணைந்து கலக்கிய, அந்த திரில்லர் மூவி பற்றிய தகவலை இங்கு காண்போம்.

கே பாலச்சந்தர் இயக்கத்தில் மேஜர் சந்திரகாந்த் என்னும் படத்திற்குப் பிறகு தன் பெயரை மேஜர் சுந்தரராஜன் என்று மாற்றிக் கொண்டார். அதிலும் குறிப்பாக 80-90 காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவரின் இரட்டை மொழி வசனம் தெரியாதவர்களே இருக்க முடியாது.

Also Read: பிரபலங்களின் மார்க்கெட்டை காலி செய்த 5 விஷ பூச்சிகள்.. ஆல் அட்ரஸையே காணாமல் போன மைக் மோகன்

அந்த அளவிற்கு ஒரு வாக்கியத்தை முதலில் ஆங்கிலத்திலும் மறுமுறை தமிழிலும் பேசுவதையே தன்மையாய் கொண்டவர் மேஜர் சுந்தரராஜன். ஒவ்வொரு வார்த்தையும் இரண்டு முறை பேசி அசத்திய இவரின் நடிப்பு தமிழ் சினிமாவில் பெரிதாய் பார்க்கப்பட்டது.

அவ்வாறு வில்லனாகவும், ஹீரோவாகவும், கௌரவ வேடத்திலும் இவர் நடித்து அசத்திய எண்ணற்ற படங்கள் இன்றும் மக்களிடையே பெரிதாய் பேசப்பட்டு வருகிறது. அந்த காலகட்டத்திலேயே தனித்துவமான நடிப்பினை கொண்டு தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மேஜர் சுந்தரராஜன்.

Also Read: 16 ஆண்டு பகையை நெல்சனை வைத்து தீர்த்துக் கொண்ட சன் டிவி.. பக்காவாக காய் நகர்த்திய கலாநிதி

நடிகராய் மற்றும் இடம்பெறாமல், இயக்குனராய் இவர் மேற்கொண்ட படங்கள் ஊரும் உறவும், நெஞ்சங்கள், கல்தூண், இன்று நீ நாளை நான், அந்த ஒரு நிமிடம், அம்மா இருக்கா போன்றவை ஆகும். அவ்வாறு 1985 ஆம் ஆண்டு மேஜர் சுந்தர்ராஜன் கதை எழுதி, இயக்கிய படம் தான் அந்த ஒரு நிமிடம்.

இப்படத்தில் கமலஹாசன், ஊர்வசி, ஜெயமாலினி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்த திரில்லர் படமாய், மக்களின் பேராதரவை பெற்று தந்தது. அதிலும் குறிப்பாக இப்படத்தில் கமலுக்கு வில்லனாய் சுந்தர்ராஜன் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இணையத்தில் கசிந்த சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக் புகைப்படம்.. ஆகஸ்ட் 15ல் சம்பவம் செய்யப் போகும் SK-21

Trending News