புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மாகாபா-வின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? அடேங்கப்பா!

ரேடியோ ஜாக்கியாக இருந்து பின்னர் விஜய் டிவியில் வீடியோ ஜாக்கியாக மாறியவர் தான் மாகாபா ஆனந்த். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவருடைய ஒருநாள் சம்பளம் தான் என்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற சேனல்களை காட்டிலும் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் களுக்கு ஒரு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் தானாகவே உருவாகி வருவது குறிப்பிட வேண்டிய ஒன்று. தொகுப்பாளர் களுக்கு மட்டுமல்லாமல் விஜய் டிவியில் போட்டியாளர்களாக கலந்துகொள்ளும் பலருக்கும் பின்னாளில் தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருவதை தொடர்ந்து பார்க்க முடிகிறது.

அந்த வகையில் விஜய் டிவியின் அடுத்த சிவகார்த்திகேயன் என புகழ் பெறும் அளவுக்கு வளர்ந்து வந்தவர் மாகாபா ஆனந்த். இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக சில படங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் சின்னத்திரையில் சாதித்து அளவுக்கு அவரால் வெள்ளித்திரையில் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை.

makapa-anand-cinemapettai
makapa-anand-cinemapettai

வெள்ளித்திரை செட் ஆகவில்லை என்பதை உணர்ந்த மா கா பா ஆனந்த் மீண்டும் திரும்ப விஜய் டிவிக்கு வந்து தன்னுடைய தொகுப்பாளர் பணியை சிறப்பாக செய்து வருகிறார். மற்றொரு தொகுப்பாளரான பிரியங்கா பிக்பாஸ் வீட்டிற்கு சென்றதால் தற்போது பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒரு நாளைக்கு ஒரு எபிசோட் பங்கு பெறுவதற்கு மா கா பா ஆனந்த் சுமார் ஒரு லட்சம் சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறுகின்றனர். அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராக வலம் வருகிறார் மா கா பா ஆனந்த்.

Trending News