விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் மா கா பா ஆனந்த். முதலில் ரேடியோ ஜாக்கியாக மிர்ச்சி எஃப் எம்மில் பணியாற்றி வந்தார். கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் அங்கு பணியாற்றினார்.
அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அடியெடுத்து வைத்தார். சிவகார்த்திகேயனுக்கு அடுத்ததாக விஜய் டிவியில் அதிகம் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொகுப்பாளர்களில் மா கா பா ஆனந்த்தும் ஒருவர்.
தொகுப்பாளராக மட்டுமில்லாமல் நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்துள்ளார். வானவராயன் வல்லவராயன் எனும் படத்தில் இரண்டாவது கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
ஐந்து படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் இதுவரை ஒரு சிறந்த ஹீரோவாக ரசிகர்கள் மா கா பா ஆனந்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மீண்டும் அவ்வப்போது சினிமா எனவும் முழுநேரம் விஜய் டிவிதான் எனவும் முடிவு செய்து பணியாற்றி வருகிறார்.
மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா இருவரும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மா கா பா ஆனந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மனைவி சுசானாவுடன் நீண்ட நாள் கழித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
மா கா பா ஆனந்த்தின் மனைவி ஹீரோயின் மாதிரி இருப்பதாக ரசிகர்கள் அவரது கமெண்ட் பாக்ஸில் தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் இணையதளங்களில் இலட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.