புதன்கிழமை, ஜனவரி 8, 2025

நயன்தாராவை கலாய்த்த மாளவிகா மோகனன்.. இப்படி ஓப்பனா அசிங்கப்படுத்திடியேம்மா!

தற்போது தமிழ் சினிமாவின் சென்சேஷனல் நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன் தான். நடிக்கத் தெரியவில்லை என்றாலும் பட வாய்ப்புகள் கன்னாபின்னாவென குவிந்து வருகிறது.

பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்தில் கூட இவருக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் முன்னணி நடிகர்களின் படவாய்ப்பு தொடர்ந்து அவருக்கு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மாளவிகா மோகனன் பட வாய்ப்பை பெறுவதற்கு முக்கிய காரணமே அவருடைய கவர்ச்சிதான் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

இது ஒருபுறமிருக்க சமீபத்திய பேட்டி ஒன்றில் மாளவிகா மோகனன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பங்கமாக கலாய்த்துள்ளது நயன்தாரா ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. முளைச்சு மூணு இலை விடல அதுக்குள்ள எவ்வளவு சீனும் எனவும் சமூக வலைதளத்தில் கொந்தளித்துள்ளனர்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாவில் நீங்க பார்த்த நகைச்சுவை காட்சிகளில் எது சிறந்த நகைச்சுவை காட்சி என மாளவிகா மோகனன் இடம் தொகுப்பாளர் ஒருவர் கேட்டுள்ளார்.

அதற்கு பிரபல நடிகை ஒருவர் சென்டிமெண்ட் காட்சியில் முகம் முழுக்க மேக்கப் போட்டுக் கொண்டு நடித்ததுதான் தன் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத காமெடி காட்சி என மாளவிகா மோகனன் குறிப்பிட்டுள்ளார். மாளவிகா மோகனன் கூறியது அட்லி இயக்கத்தில் வந்த ராஜா ராணி படத்தில் நயன்தாரா நடித்த காட்சி தான் எனவும் கிளப்பி விட்டு விட்டனர்.

இதனைக் கேட்டு டென்ஷனான நயன்தாரா ரசிகர்கள் தற்போது இணையதளங்களில் மாஸ்டர் படத்தில் ஊறுகாய் அளவுக்குக்கூட உங்கள் கதாபாத்திரம் இல்லை எதற்கு இவ்வளவு சீன் என பதிலடி கொடுத்து வருகின்றனர்.

malavika-mohanan-1
malavika-mohanan-1

Trending News