வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஐட்டம் பாம் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் மாளவிகா மோகன்.. கடுமையாக விமர்சித்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில்  பேட்ட திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் மாளவிகா மோகன். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து  விஜய்யுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அப்படி மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்ததன் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். மாளவிகா மோகன் படங்களில் காட்டும் கவர்ச்சியை விட போட்டோஷூட்டில் காட்டும் கவர்ச்சி தான் அதிகம்.

இவர் வெளியிடும் ஒவ்வொரு போட்டோஷூட் படு கவர்ச்சியாக இருக்கும். அதனாலேயே பல ரசிகர்களும் மாளவிகா மோகன் சமூக வலைத்தள பக்கத்தை பின்தொடர்ந்து வருகின்றனர். மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனுக்கு பெரிய அளவு வரவேற்பு இருந்தாலும் அவர் நினைத்தபடி  ரசிகர்களின் ஆதரவு கிடைக்கவில்லை.

malavika mohanan
malavika mohanan

மாஸ்டர் படத்தில் நடித்த ஆண்ட்ரியா, சாந்தனு மற்றும் மாளவிகா மோகன் போன்றவர்களுக்கு பெரிய அளவில் படத்தில் காட்சிகள் எதுவும் வைக்கப்படவில்லை. அதனாலேயே இவர்கள் வரும் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

அதனால் இனிமேல் கதைக்கு முக்கியத்துவம் படத்தில் நடிக்க இருப்பதாக  மாளவிகா மோகனன்  நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மாளவிகா மோகனன் நெருங்கிய நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை  அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆண் நண்பரை கேவலமாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் ஆண் நண்பரின் பெயர் ஐட்டம் பாம் என்பதால் ஓவராக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த கேவலமான விமர்சனங்களுக்கு மாளவிகா மோகன் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என தெரியவில்லை ஒரு மனிதனை தரக்குறைவாக விமர்சிப்பது தவறு என பலரும் கூறி வருகின்றனர்.

Trending News