வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கண்ணா பின்னா கிளாமரில் களமிறங்கிய மாளவிகா மோகன்.. பற்றி எரியும் இணையதளம்!

பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரிதும் பாராட்டப்பட்டது. அதன்பிறகுதான் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து அதிலும் வெற்றி கண்டார்.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் வரிசையில் மாளவிகா மோகனன் இடம் பிடித்துள்ளார். மாஸ்டர் படத்திற்கு பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருவதாகவும் ஆனால் அந்த படத்தின் கதாநாயகன் யார் என்பதையும், தனக்கு என்ன கதாபாத்திரம் என்பதையும் தெளிவாக கேட்டுக் கொண்டுதான் படத்தில் நடிப்பேன் என பல தரப்பினரிடமும் கூறி வருகிறாராம்.

அதற்கு காரணம் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக இல்லை என்பதுதான். தற்போது தனுஷ் நடிப்பில் அவருக்கு ஜோடியாக D43 எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மாளவிகாவுக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என படக்குழுவினர் கூறுகின்றனர்.

ஆனால் அம்மணி அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதும், மீன் சமையல் வீடியோ வெளியிடுவதும் என தொடர்ந்து தனது செல்லமான சேட்டைகளை செய்து வருகிறார்.

malavika-mohan
malavika-mohan

மாளவிகா மோகனுக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் தற்போது உருவாகி உள்ளதால் இவர் எது செய்தாலும் அதனை ரசிகர்கள் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பது தான். தற்போது படிக்கட்டில் உட்கார்த்து கவர்ச்சி புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

malavika-mohan
malavika-mohan

Trending News