மாஸ்டர் படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார் மாளவிகா மோகனன். ரசிகர்களுக்கு மட்டுமல்ல பல நடிகர்களுக்கும் ஃபேவரைட் நடிகையாக மாறி விட்டாராம்.
மாஸ்டர் படத்தில் எதிர்பார்த்த கதாபாத்திரம் இல்லை என்றாலும் ஓரளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். அதைவிட அவர் படத்தில் நடித்த ஒரு சில காட்சிகளை மீம் கிரியேட்டர்கள் இணையத்தில் கிண்டல் செய்தனர்.
அதையும் மாளவிகா மோகனன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார். அதுமட்டுமில்லாமல் இப்படி கிண்டலடித்தால் அடுத்த பட வாய்ப்பு கிடைக்காது என்பதற்காக உசாராக அடிக்கடி கில்மா புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் மசாலா என்ற பத்திரிக்கைக்கு மாளவிகா மோகனன் மார்க்கமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மாஸ்டர் படத்திற்கு பிறகு மாளவிகா மோகனன் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் D43 என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு புகைப்படங்கள் கூட சமீபத்தில் வெளியானது.
அதனைத் தொடர்ந்து மேலும் சில முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை குறி வைத்துள்ளாராம் மாளவிகா மோகனன். அது மட்டும் ஓகே ஆனால் சென்னையில் செட்டிலாகிவிட வேண்டியதுதான் என முடிவு செய்துள்ளாராம்.