வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அந்த நடிகர் படம்னா எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார்.. கொக்கி போடும் மாளவிகா மோகனன்.. சிக்குவாரா?

சமீபகாலமாக நடிகைகள் பலரும் நேரடியாக படவாய்ப்புகள் கேட்பதை விட எனக்கு அந்த நடிகரை பிடிக்கும், இந்த நடிகரை ரொம்ப பிடிக்கும் எனக்கூறி பட வாய்ப்புகளை அதிகமாக தேடி பிடித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஒவ்வொரு படத்திற்கும் பிடித்த நடிகர்களை மாற்றிக் கொண்டே செல்கிறார் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன். மாஸ்டர் படத்திற்கு முன்பு தனக்கு பிடித்த நடிகர் விஜய் தான் என குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு மாஸ்டர் பட வாய்ப்பு கிடைத்தது.

மாஸ்டர் படம் முடிந்து வெளியானவுடன் தனுஷோட நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன் என ஒரு ட்வீட் போட்டார். உடனடியாக தனுஷ் மற்றும் கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகும் D43 படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

malavika-mohanan-cinemapettai-01
malavika-mohanan-cinemapettai-01

தற்போது தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன் தெலுங்கு சினிமாவிலும் தன்னுடைய மார்க்கெட்டை வலுப்படுத்துவதற்காக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார் என கூறியுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகராகவும் சூப்பர் ஸ்டார் நடிகராகவும் வலம் வருபவர் மகேஷ் பாபு. கடந்த சில வருடங்களில் வெளியான மகேஷ்பாபுவின் படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழ்நாட்டில் விஜய் எப்படியோ அப்படி தெலுங்கில் மகேஷ் பாபு.

இந்நிலையில் மாளவிகா மோகனன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வாயிலாக மகேஷ்பாபுவுடன் எப்படியாவது ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என ஆசையாக இருப்பதாக பட வாய்ப்புக்கு அடிபோட்டுள்ளார். போகிற போக்கை பார்த்தால் அடுத்தப்பட வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் மாளவிகா மோகனன் வட்டாரங்கள்.

Trending News