Thangalan: தமிழ் சினிமாவை பொறுத்தவரை இயக்குனர் பாலா கிட்ட வேலை செய்ற நடிகர்கள், நடிகைகள் தான் பாவம் என்று சொல்வார்கள். ரத்த காயம் ஏற்படுவதில் இருந்து, எலும்பு உடைகிற வரைக்கும் எல்லா செய்தியும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
அவருக்கே போட்டியாக மாறி இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். அட்டகத்தி, மெட்ராஸ் போன்ற எதார்த்த படங்களை எடுத்த ரஞ்சித் தற்போது தங்கலான் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு தங்க சுரங்கத்தில் வேலை செய்த பழங்குடி மக்களை பற்றிய கதை இது.
இந்த படம் வெளியான பிறகு கே ஜி எஃப் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு இதன் திரைக்கதை இருக்கும் என்கிறார்கள். இந்த படத்திற்காகத்தான் சியான் விக்ரம் பல வருடங்களாக தவம் கிடக்கிறார்.
இதில் முக்கிய கேரக்டரில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகன் நடித்திருக்கிறார் நடித்திருக்கிறார். பழங்குடியின மக்கள் பற்றிய கதை என்பதால் தத்ரூபமாக இருக்க வேண்டும் என மேக்கப்பில் இருந்து எல்லாமே மெனக்கெட்டு செய்கிறார்கள்.
இதனால் இந்த படம் முடிவதற்கு உன்கிட்ட தட்ட ஐந்து டாக்டர்களிடம் டிரீட்மென்ட் போய் விட்டதாக மாளவிகா சொல்லி இருக்கிறார். மக்கள் போல் தெரிய வேண்டும் என்பதற்காக போடப்படும் மேக்கப் கிட்டதட்ட ஐந்து மணி நேரம் போடுவார்களாம்.
அது மட்டும் இல்லாமல் அது முழுக்க கெமிக்கல் என்பதால் உடம்பு முழுக்க ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படத்திற்காக மாளவிகா லென்ஸ் போட்டு நடிக்க வேண்டி வந்திருக்கிறது. கண்களில் லென்ஸ் போட்டு இருக்கும்போது சுற்றி புழுதி, தூசி எல்லாம் பட்டதால் அதற்காகவும் கண் டாக்டரிடம் சென்று இருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் ஒரு சில இடங்களுக்கெல்லாம் நடந்து செல்வது போல் எடுக்கப்படும் காட்சிகளுக்கு செருப்பு போடாமல் நடக்க வேண்டுமாம். இது போன்ற நிறைய கஷ்டங்களை அந்த படத்திற்காக சந்தித்திருப்பதாக சொல்லி இருக்கிறார்.
வெறித்தனமாக வெளிவந்த தங்கலான் ட்ரெய்லர்
- விக்ரமுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸாக வெளியான தங்கலான் வீடியோ
- நம்பி இருந்த விக்ரமுக்கு வந்த இடியாப்ப சிக்கல்
- சாமி ஆடப்போகும் சியான்