வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விக்ரமுக்கு போட்டியாக வித்தை காட்டும் மாளவிகா.. தங்கலானை வைத்து போடும் மாஸ்டர் பிளான்

பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலனாக மிரட்டிய விக்ரம் தற்போது தங்கலான் மூலம் அதிரடி காட்ட வருகிறார். பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகின்றனர்.

இடைவிடாது படப்பிடிப்பை நடத்தி வந்த பட குழுவினர் இன்னும் ஓரிரு வாரங்களில் ஒட்டு மொத்த ஷூட்டிங்கை முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் மாளவிகா இப்படத்தில் தன்னுடைய கடின உழைப்பை கொடுத்திருந்தது பற்றி ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவருடைய கேரக்டர் சக்தி வாய்ந்ததாகவும், கடுமையாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Also read: முதல் பாகத்தை விட 2ம் பாகத்தில் மண்ணை கவ்விய பொன்னியின் செல்வன் வசூல் ரிப்போர்ட்.. தலைசுற்றிப்போன மணிரத்தினம்

மேலும் அந்த கேரக்டருக்காக அவர் சிலம்பம், ஜிம்னாஸ்டிக், ரோலிங், கிங்ஸ், ஜம்ப்ஸ் போன்ற பல வித்தைகளையும் கற்றுக் கொண்டாராம். அது மட்டுமின்றி பீரியட் படமாக தங்கலான் உருவாவதால் மேக்கப் உள்ளிட்டவற்றிலும் வித்தியாசம் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் மாளவிகா இதுவரை நடித்த படங்களிலேயே கடினமான உடல் உழைப்பை கொடுத்த படம் இதுவாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு இயக்குனர் அவரை நன்றாக வேலை வாங்கி இருக்கிறார் என்பது அவர் கூறுவதிலிருந்தே தெரிகிறது. ஏற்கனவே விக்ரம் இப்படத்திற்காக உடல் எடையை குறைத்து ரொம்பவும் அர்ப்பணிப்புடன் நடித்து வருகிறார்.

Also read: விஜய், அஜித் சினிமாவை விட்டுப் போகணும்னு ஆசைப்படும் 5 நடிகர்கள்.. ஒரே ஒரு வாய்ப்புக்காக ஏங்கும் தங்கலான்

இயல்பாகவே அவர் அப்படித்தான் என்றாலும் இந்த கேரக்டருக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்கிறார். சமீபத்தில் கூட அவருடைய பிறந்தநாள் படக்குழு வெளியிட்ட மேக்கிங் வீடியோ அதை உறுதிப்படுத்தி இருந்தது. தற்போது மாளவிகாவும் விக்ரமுக்கு போட்டியாக ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறேன் என்று கூறுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் தூண்டி இருக்கிறது.

மேலும் விஜய், தனுஷ் ஆகியோருக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தாலும் பெரிய அளவில் அவருக்கான வரவேற்பு தமிழில் கிடைக்கவில்லை. அதனாலேயே இந்த கஷ்டமான கேரக்டரை ஏற்று நடித்திருக்கும் அவர் பட ரிலீசுக்குப் பிறகு தன்னுடைய மார்க்கெட் வேற லெவலுக்கு சென்று விடும் என மனக்கோட்டை கட்டி கொண்டிருக்கிறாராம். அதை தொடர்ந்து அஜித், சூர்யா போன்ற பெரிய நடிகர்களின் பட வாய்ப்பை பிடிக்கவும் அவர் மாஸ்டர் பிளான் போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: சாமுராய், படத்துக்கு பின் விக்ரமுக்கு ஏற்பட்ட பிரச்சனை .. கேரியர் பெஸ்ட் க்கு ஆசைப்பட்டு மண்ணாய் போன தங்கலான்

Trending News