இன்றைய கால கட்டத்தில் சமூக வலைதளங்களில் பா**யல் தொல்லை கொடுக்கும் நபர்களின் முகத்திரையை கிழித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை மற்றும் சமூக ஆர்வலரான ரேவதி சம்பத் என்பவர் சமூகவலைதளத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
மலையாள சினிமாவில் பிரபலமான ரேவதி சம்பத் தனக்கு 14 பேர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக பட்டியலிட்டு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதவியில் இவர்கள் தன்னை பாலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் துன்புறுத்தியவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றவாளிகளின் லிஸ்ட் இதோ என்று இயக்குனர், நடிகர், டாக்டர், போட்டோகிராபர், போலீஸ் என பல தரப்பு சேர்ந்தவர்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ரேவதி சம்பத் 2 வாரங்களுக்கு முன்பாக நடிகர் சித்திக் மீதான பா**யல் குற்றச்சாட்டு கூறியிருப்பது அனைவரும் அறிந்ததே.
