செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இந்தியன் 2 படத்தில் சிக்கலை ஏற்படுத்திய சிபிஐ கேரக்டர்.. ஷங்கரை காப்பாற்றிவிட்ட நடிகர்

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 தற்போது பல பிரச்சனைகளை தாண்டி வெற்றிகரமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த திரைப்படம் சில வருடங்களாக வெவ்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்தது.

அதனாலேயே படம் வெளிவருமா என்ற ஒரு சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. தற்போது அதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறந்துள்ளது. புது உத்வேகத்துடன் பட குழுவினர் இந்த ஷூட்டிங்கில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் ஒரு புது பிரச்சனை தலை தூக்கி உள்ளது.

Also read : ஹிந்தி படம் நடிக்க போனதால் கமலுக்கு வந்த நிலைமை.. புகழை மட்டுமல்லாமல் நடிகையையும் தூக்கிய நாயகன்

அதாவது இதன் முதல் பாகத்தில் சிபிஐ கதாபாத்திரத்தில் நடிகர் நெடுமுடி வேணு நடித்திருப்பார். அதைத்தொடர்ந்து அவர் இரண்டாம் பாகத்திலும் நடித்து வந்தார். ஆனால் கடந்த வருடம் அவர் உடல்நல குறைவின் காரணமாக உயிர் நீத்தார். இதனால் அவர் நடித்த அந்த கதாபாத்திரம் பாதியிலேயே நிற்கிறது.

படத்தின் முக்கிய கேரக்டராக இருக்கும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகரை சங்கர் பல நாட்களாக தேடி வந்தார். இந்நிலையில் அந்த கேரக்டரில் நடிக்க மலையாள நடிகர் நந்து பொதுவல் கமிட் ஆகி இருக்கிறார். ஒரு வகையில் இவர் பார்ப்பதற்கு நெடுமுடி வேணு சாயலில் இருக்கிறார்.

Also read : லைக்காவை வளைத்துப் போட்ட உதயநிதி.. சேனாதிபதியாக மாஸ் காட்டும் இந்தியன்-2 பட போஸ்டர்

அதனால்தான் சங்கர் இவரை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்து இருக்கிறார். மலையாள சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் இந்தியன் 2 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகிறார். அந்த வகையில் இவர் முதல் திரைப்படத்திலேயே மிகப்பெரிய ஜாம்பவானுடன் இணைந்துள்ளார்.

இந்தியன் 2ல் கமலுக்கு எந்த அளவு வலுவான கதாபாத்திரம் இருக்கிறதோ அதேபோன்றுதான் இந்த சிபிஐ கதாபாத்திரமும். இதனால் தற்போது அவருக்கு மலையாள திரையுலகில் ஏகப்பட்ட வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

Also read : ஷங்கர் தயாரிப்பை நிறுத்த காரணமான 5 படங்கள்.. நினைத்துக்கூட பார்க்காத பலமான அடி

Trending News