தமிழ் சினிமாவில் எப்போதுமே தமிழ் நடிகைகளை விட அண்டை மாநிலங்களிலிருந்து வரும் நடிகைகளுக்கு மார்க்கெட் மற்றும் ரசிகர் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் பல நடிகைகளை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகள் நடிக்க ஆரம்பித்துள்ளனர். அதிலும் குறிப்பாக செய்தி தொகுப்பாளராக இருக்கும் பெண்கள் தொடர்ந்து தமிழ் ஹீரோயின்களாக உருவெடுத்து வருகின்றனர்.
மலையாள சினிமாவுக்கும் தமிழ் சினிமாவுக்கும் எப்போதுமே ஒரு கனெக்சன் உண்டு. மலையாள நடிகைகளைப் பார்த்தால் மட்டும் தமிழ் ரசிகர்கள் தங்களுடைய மனசை ஈசியாக பறி கொடுத்து விடுகின்றனர்.
ஆனால் அப்படிப்பட்ட ரசிகர்களின் வரவேற்பு பத்து வருடங்களுக்கு முன்னால் பரத் நடிப்பில் வெளியான யுவன் யுவதி படத்தில் நடித்த ரீமா கலிங்கல் என்பவருக்கு கிடைக்கவில்லை. ஒருவேளை அப்போது மீம்ஸ் கிரியேட்டர்ஸ் இருந்திருந்தால் அவருக்கு மார்க்கெட் கிடைத்திருக்குமோ என்னமோ.
இதனால் மலையாளத்தில் மட்டுமே நீண்ட வருடங்களாக நடித்துக்கொண்டிருந்த ரீமா கலிங்கல் தற்போது ஸ்டன்ட் இயக்குனர் சில்வா இயக்கும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
இதே படத்தில் தான் சமுத்திரக்கனி மற்றும் சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் ஆகியோர் ஏற்கனவே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஸ்டண்ட் சில்வா இயக்கினாலும் கதை எழுதியது இயக்குனர் விஜய் என்பதும் குறிப்பிடத்தக்கது.