திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

2024 இல் ஒரு ஹிட் கொடுக்க தடுமாறும் கோலிவுட்.. எட்டு படங்களில் பல கோடி வசூல் பார்த்த மலையாள இண்டஸ்ட்ரி

Mannjumel Boys : 2024ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் சினிமாவுக்கு மந்தமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏப்ரல் மாதம் 15 நாட்கள் தாண்டிய நிலையில் இப்போது வரை ஒரு மிகப்பெரிய ஹிட் படம் கூட கொடுக்கவில்லை. மேலும் இப்போது தேர்தல் நடக்க உள்ளதால் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் தள்ளிப் போய் உள்ளது.

ஆனால் தமிழ் சினிமாவுக்கு நேர் எதிராக மலையாள சினிமாவில் வசூலை வாரிக் குவித்து வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் ரிலீஸ் வரை கிட்டத்தட்ட 750 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. அதிலும் குறிப்பாக எட்டு படங்கள் பட்டையை கிளப்பி இருக்கிறது.

அன்பேஷிப்பின் கண்டேதும் பிப்ரவரி ஒன்பதாம் தேதி வெளியானது. திரில்லர் கலந்த இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்ததாக மம்முட்டி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற படம் பிரம்மயுகம்.

750 கோடிக்கு மேல் வசூல் செய்த மலையாள சினிமா

மேலும் இந்த வருடம் மலையாள சினிமாவையே தூக்கி நிறுத்திய படம் என்றால் அது மஞ்சுமல் பாய்ஸ். நண்பர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.

ஆபிரகாம் ஓஸ்லர் படத்தில் ஜெயராம், சாய்குமார் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படமும் ஓரளவு நல்ல கலெக்ஷனை பெற்றது. அடுத்ததாக மீண்டும் மலையாள சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் தான் பிரேமலு.

இந்தப் படமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக வசூல் செய்திருந்தது. இதைத்தொடர்ந்து பிரணவ் மோகன்லால் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவான வருஷங்களுக்கு சேஷம் என்று இசையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பிருத்விராஜ் சுகுமாரின் அசாத்தியமான நடிப்பில் உருவான தி கோட் லைஃப் படம் இப்போதும் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படமும் வசூலை வாரி குவித்து வருகிறது.

சமீபத்தில் பகத் பாசில் மற்றும் மன்சூர் அலிகான் நடிப்பில் உருவான ஆவேசம் படம் மலையாள சினிமாவின் அடுத்த ஹிட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அவ்வாறு மலையாள சினிமாவுக்கு இந்த ஆண்டு பொன் ஆண்டாக அமைந்திருக்கிறது.

Trending News