திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

கணவன் தவறு செய்தால் ஏற்றுக் கொள்ளலாமா எனக் கேட்ட ரசிகர்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் பதில் அளித்த வாணி போஜன்

தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வாணி போஜன்.ஆனால் இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அப்போதெல்லாம் ரசிகர்கள் பலரும் வாணிபோஜன் சின்னத்திரை நயன்தாரா என தான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு சின்னத்திரையில் பிரபலமாக இருந்தார்.

சமீபகாலமாக சின்னத்திரையில் இருக்கும் நடிகைகள் பலரும் வெள்ளித்திரையில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் வாணிபூஜன் இடம் பிடித்துள்ளார். அதாவது ரசிகர் ஒருவர் சின்னத்திரையில் பல வருடங்களாக நீங்கள் நடித்துள்ளீர்கள். ஆனால் தற்போது வெள்ளித்திரையில் கவனம் செலுத்துகிறீர்கள் அதற்கு என்ன காரணம் என கேட்டுள்ளார்.

அதற்கு வாணி போஜன் எனக்கு எல்லா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது சின்னத்திரையில் நடக்குமா என்று தெரியவில்லை வெள்ளித்திரையில் கண்டிப்பாக நடக்கும் என்பதால் தான் தற்போது சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறேன் என கூறியுள்ளார். சினிமாவில் ஜெயிப்பதற்கு கவர்ச்சி முக்கியமாக கதாபாத்திரம் முக்கியமா என கேட்ட ரசிகருக்கு சினிமாவில் ஜெயிப்பதற்கு கவர்ச்சியும், கதாபாத்திரம் முக்கியமில்லை திறமைதான் முக்கியம் எனவும் கூறியுள்ளார்.

malaysia to amnesia
malaysia to amnesia

மேலும் மலேசியா டு அம்னீசியா படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வாணிபோஜன். இப்படத்தின் கதைப்படி திருமணத்திற்கு பிறகும் ஒரு பெண்ணிடம் ரகசிய தொடர்பு வைத்திருப்பார் வைபவ் அதை தெரிந்தும் வாணிபோஜன் மன்னித்து ஏற்றுக்கொள்வார். இவ்வளவு பெருந்தன்மையுடன் இருப்பது சரியா சாத்தியமா என ரசிகர் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு வாணி போஜன் குடும்பத்தின் நலன் கருதி பல பெண்கள் தங்களது கணவனை ஏற்றுக்கொள்கிறார்கள். அதிலும் ஒரு சில பெண்கள் துரோகத்தை தாங்க முடியாமல் வெறுத்து விடுகிறார்கள். இதில் குடும்பத்திற்காக ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என கூறியுள்ளார்.

Trending News