வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

வடசென்னை ஆண்ட்ரியாவா இது.? மாலத்தீவை சூடேற்றிய ஜாலியான வீடியோ!

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. கவுதம் மேனன் இயக்கியிருந்த படத்தில் சரத்குமார் நாயகனாக நடித்திருந்தார். இப்படத்திற்காக சிறந்த அறிமுக நாயகிக்கான விஜய் டிவி விருதைப்பெற்றார் ஆண்ட்ரியா.

இப்படத்தையடுத்து செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தின் வெற்றியால் இவருக்கு அடுத்ததடுத்து வாய்ப்புகள் அமைந்தது. இத்தபின் தல அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்திருந்தார்.

நாயகியாக மட்டுமல்லாமல், கேரக்டர் ஆர்டிஸ்ட்டாகவும், பின்னணி பாடகியாகவும் தொடர்ந்து அசத்தி வருகிறார் ஆண்ட்ரியா. இவர் கடைசியாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘துப்பறிவாளன்’ படத்தில் வில்லியாகவும் நடித்து அசத்தியிருந்தார்.

சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு எடுத்த புகைப்படங்களையும், வீடியோ-வையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. சமீபத்தில் ஹன்ஷிகா லட்சத்தீவுக்கு சென்று தனது பிகினி வீடியோக்களை வெளியிட்டிருந்தார். ஆண்ட்ரியாவும் பிகினி வீடியோக்களை வெளியிடுவாரா என வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

தற்போது இவர் கைவசம் ‘பிசாசு 2’ படம் உள்ளது. இப்படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார். இதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்திலும் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Trending News