திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

காந்தாரா போல் அக்கட தேசத்தில் பிளாக்பஸ்டரான மாளிகப்புரம்.. ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த விமர்சனம்

கன்னடத்தில் வெளியான காந்தாரா படத்தை தொடர்ந்து மலையாளத்தில் கடந்த டிசம்பர் 30ம் தேதி வெளியான மாளிகப்புரம் உலகம் முழுவதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் முதலில் மலையாளத்தில் மட்டுமே உருவாக்கப்பட்ட இந்த படத்தை அடுத்தடுத்து பிற மொழிகளிலும் டப் செய்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

அதேபோல் படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பினால் தற்போது தமிழிலும் டப் செய்து வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என அனல் பறக்கும் ட்ரெய்லருடன் அறிவித்துள்ளனர். இந்தப் படத்தை சூர்யா நடித்த பேரழகன் படத்தின் டைரக்டர் சசி சங்கர் மகன் விஷ்ணு சசி சங்கர் அறிமுக இயக்குனராக படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக மலையாள இளம் நடிகர் உன்னி முகுந்தன் நடித்துள்ளார்.

Also Read: IMDB வெளியிட்ட 2022 சிறந்த டாப் 10 படங்கள்.. இந்தியளவில் டஃப் கொடுத்த காந்தாரா

இவர் ஏற்கனவே தனுஷ் உடன் சீடன் படத்திலும், அதைத்தொடர்ந்து பாகமதி படத்தில் அனுஷ்காவிற்கு ஜோடியாகவும், சமந்தாவின் யசோதா போன்ற படங்களில் ஹீரோ மற்றும் வில்லனாகவும் தென்னிந்திய அளவில் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். இந்த படத்தில் 8 வயது சிறுமி ஒருவர் சபரிமலை சென்று அங்கு ஐயப்பனை தரிசிக்க விரும்புகிறார். இதற்கு வீட்டில் சம்மதிக்காததால், உடன் படிக்கும் தோழனுடன் சபரிமலை செல்லக் கிளம்புகிறார். அப்போது கதாநாயகன் அறிமுகம் கிடைக்க அவருடன் சேர்ந்து சபரிமலை பயணிக்கிறார்.

பிறகு சபரிமலையில் ஐயப்பன் சன்னிதானம் அருகே அமைந்துள்ள மாளிகப்புரத்தம்மன் கதையையும் இந்த படம் விவரிக்கிறது. அதாவது பாண்டிய நாட்டு குலதெய்வம் மீனாட்சி பந்தள நாட்டில் குடியேறிய கதை பற்றியதுதான் இந்த படம். எனவே மலையாளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த மாளிகப்புரம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி தமிழிலும் திரையிடப்படுவதால் இந்தப் படத்தை குறித்து ரசிகர்கள் திரையரங்குகளில் பேரார்வத்துடன் பார்க்க காத்திருக்கின்றனர்.

Also Read: காந்தாரா படத்தைக் காப்பியடித்த லவ் டுடே.. அக்கட தேசத்திலும் டஃப் கொடுக்கும் பிரதீப் ரங்கநாதன்

அத்துடன் இந்தப் படத்தை பார்ப்பதற்கு ஐயப்பன் பக்தர்களாக இருக்கத் தேவையில்லை. அந்த அளவிற்கு படத்தின் டிரைலரை பார்க்கும் போதே சிலிர்ப்பட்ட வைக்கிறது. தமிழில் வெளியாகி இருக்கும் மாளிகப்புரம் ட்ரெய்லர் சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

நிச்சயம் இந்த படமும் காந்தாரா படம் போல் அனைத்து மொழிகளிலும் பட்டையை கிளப்பும் என்பது ட்ரெய்லரை பார்த்தாலே தெரிகிறது. மேலும் ட்ரைலரில் மட்டுமல்ல படத்திலும் பக்தி, ஒழுக்கம், உணர்வுகள், பிஜிஎம், சண்டை, பீல் ஆகிய அனைத்தும் கலந்த கலவையாக குடும்பமாக சென்று பார்க்கக்கூடிய தரமான படம் என மலையாளத்தில் படத்தை பார்த்த பலரும் விமர்சித்துள்ளனர். பெரும்பாலும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட்டுகள் மட்டுமே குவிந்ததால் தமிழ் ரசிகர்களையும் கவரும்.

Also Read: 50 வருடங்களில் பார்க்காத வித்தியாசமான கதைக்களம்.. மிரளவைத்த நடிகருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி

Trending News