வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

உண்மையை உளறிய மல்லி, வெண்பாவிடம் போட்டுக் கொடுத்த பாட்டி.. தாலி கட்டப் போகும் விஜய்

Malli Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மல்லி சீரியலில், வெண்பாவை தன்வசம் வைத்துக் கொள்ள வேண்டும், விஜய்யை பழிவாங்க வேண்டும் என்பதற்காக நிஷா மற்றும் அவருடைய அப்பா பிளான் பண்ணி மல்லியை கடத்தி விட்டார்கள். அத்துடன் எனக்கும் வெண்பாக்கம் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கையெழுத்து போட்டுக் கொடுத்தால் பணம் தருவதாக சொல்லி மிரட்டி கையெழுத்து கேட்கிறார்கள்.

உடனே மல்லி இவர்களிடமிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று புத்திசாலித்தனமாக யோசித்து சரி நீங்கள் கேட்டபடி கையெழுத்து போடுகிறேன் என்று சம்மதம் தெரிவிக்கிறார். அந்த நேரத்தில் மல்லியை கட்டி போட்ட கயிறை கட்டி விட்ட நிலையில் மல்லி, விஜய்க்கு ஒரே ஒரு போன் பண்ணி பேசிட்டு கையெழுத்து போடுகிறேன் என்று கேட்கிறார்.

மல்லி கழுத்தில் தாலி கட்ட போகும் விஜய்

வெண்பா எனக்காக ஸ்கூலில் காத்துக் கொண்டிருப்பார், அதனால் வெண்பாவை கூட்டிட்டு வந்து விட்டீர்களா என்பதை மட்டும் கேட்டுட்டு கையில் போடுகிறேன் என்று மல்லி சொல்கிறார். உடனே நிஷா அப்பா சரி என்று சொல்லி கையில் போனை கொடுக்கிறார். போன் வாங்கினதும் ஒரு நிமிஷத்தில் வீடியோ காலில் விஜய்க்கு இருக்கும் இடத்தையும் யார் கட்டிப் போட்டிருக்கிறார் என்பதையும் காட்டிவிடுகிறார்.

இதை பார்த்த நிஷா அப்பா போனை புடுங்கிவிட்டு மல்லியை அடிக்க ஆரம்பிக்கிறார்கள். மல்லி எப்படியாவது இவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று போராடுகிறார். அந்த சமயத்தில் விஜய் சரியாக உள்ளே நுழைந்து சண்டை போட்டு மல்லியை காப்பாற்றுகிறார். அப்பொழுது விஜய் ஆபத்தில் இருக்கிறார் என்று தெரிந்ததும் மல்லியும் அவருக்கு தெரிந்த தற்காப்பு கலை மூலம் அங்கு இருப்பவர்களை அடித்து விடுகிறார்கள்.

பிறகு விஜய், வெண்பாவின் தாத்தா மற்றும் நிஷாவிடம் இந்த மாதிரியான சில்லறைத்தனமான வேலையை விட்டு விடுங்கள். உங்களால் எங்களுக்கும் மல்லிக்கும் ஏதாவது பிரச்சனை என்றால் நான் சும்மா இருக்க மாட்டேன். மல்லி, வெண்பாவை பல இக்கட்டண சூழ்நிலையில் இருந்து காப்பாற்றி இருக்கிறார். அத்துடன் மல்லியை நிஷா அடித்ததற்கு திருப்பி அடிக்க விஜய் சொல்லிவிட்டார்.

அதனால் மல்லி டபுள் மடங்கு அடியை நிஷா கண்ணம் பழுக்கும் படி கொடுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து வெண்பாவை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார்கள். வரும் வழியில் விஜய் மற்றும் மல்லி ரொமான்ஸ் பண்ணி கொள்கிறார்கள். அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் காதல் வந்துவிட்டாலும் அதை தெரியப்படுத்தாமல் மௌனமாக இருக்கிறார்கள்.

தற்போது இவர்களுடைய காதல் கல்யாணத்தில் முடியும் விதமாக மல்லிக்கும் விஜய்க்கும் கல்யாணம் ஆகவில்லை வெண்பாவிற்காக தான் அக்ரிமெண்ட் படி நடிக்க வந்திருக்கிறார் என்பது விஜய்யின் சித்திக்கு தெரிந்து விட்டது. அதன் மூலம் விஜய் சித்தி, வெண்பாவிடம் போட்டுக் கொடுத்து விடுகிறார். உடனே வெண்பா இதைப் பற்றி அனைவரும் முன்னணியில் கேட்கையில் மல்லி மற்றும் விஜய் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

இதனால் இவர்களுடைய அக்ரீமெண்ட் நிராகரிக்கும் அளவிற்கு உண்மையில் இருவருக்கும் திருமணம் நடைபெற போகிறது. கூடிய விரைவில் மல்லி கழுத்தில் விஜய் தாலி கட்ட போகிறார். ஆசைப்பட்ட மாதிரி வெண்பாவிற்கு மல்லி நிஜ அம்மாவாக மாறப்போகிறார்.

சன் டிவியில் டிஆர்பி ரேட்டிங் பிடித்த சீரியல்

Trending News