Maamannan: உதயநிதி தன் கடைசி படம் என்று அறிவித்துவிட்ட காரணமாகவே மாமன்னன் படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அதை இன்னும் அதிகரிக்கும் வகையில் மாரி செல்வராஜ் முன்வைத்த கருத்தும் பல விமர்சனங்களை பெற்றது. இப்படி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாமன்னன் இன்று ஒரு வழியாக வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுக் கொண்டிருக்கிறது.
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தொடர்ந்து தன் மூன்றாவது படத்திலும் சாதித்து காட்டி இருக்கிறார் மாரி செல்வராஜ். அந்த வகையில் இன்று விடுமுறை தினமாக இருப்பதால் திரையரங்குகளில் படத்தை பார்க்க கூட்டம் அலைமோதுகிறது.
அது மட்டும் இன்றி வடிவேலுவின் கதாபாத்திரமும், நடிப்பும் இந்த பாசிட்டிவ் விமர்சனங்களுக்கு ஒரு காரணமாக இருக்கிறது. அதனால் வார இறுதி நாட்களிலும் இப்படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் இந்த வாரம் மாமன்னனை தவிர சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
அந்த வகையில் இப்படம் 700 தியேட்டர்களுக்கு மேல் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. இதுவே ஒரு பெரிய பலமாக பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த வாரமும் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் அடுத்த 15 நாட்களுக்கு மாமன்னன் தான் சிங்கிளாக கெத்துக்காட்ட போகிறது.
இதன் மூலம் படத்தின் வசூலும் கணிசமாக உயரும் என்பதில் சந்தேகம் இல்லை. சில வாரங்களுக்கு முன்பு வெளியான சரத்குமாரின் போர் தொழில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் அப்படம் இப்போதும் சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.
அப்படி பார்த்தால் மாமன்னன் படத்திற்கு சரத்குமார் மட்டும் தான் டஃப் கொடுக்கிறார். இருந்தாலும் வசூலை பொறுத்த வரையில் உதயநிதி காட்டில் அடைமழை தான். அந்த வகையில் அவருடைய கடைசி படம் அவருக்கு காலம் கடந்து சொல்லும் வகையில் அமைந்திருக்கிறது.