திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நயன்தாராவுடன் மல்லுக்கட்டும் மாமி.. நம்பர் ஒன் இடத்துக்காக திருமணத்தை வெறுத்த வைராக்கியம்

என்னதான் தோல்வி படங்களை கொடுத்தாலும், சர்ச்சைகளை சந்தித்தாலும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற கெத்துடன் தான் நயன்தாரா வலம் வந்து கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயரும் இவருக்கு இருக்கிறது. இப்படி நம்பர் ஒன் இடத்தை பல வருடங்களாக தக்க வைத்துக் கொண்டிருக்கும் இவரை ஓரங்கட்டும் முயற்சியில் இருக்கிறார் மாமி நடிகை.

தற்போது 39 வயதாகும் திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருக்கிறார். எப்பொழுது தான் இவர் செட்டிலாவார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தாலும் திரிஷாவின் திட்டமே வேறாக இருக்கிறது. அதாவது நயன்தாராவின் நம்பர் ஒன் இடத்தை தற்போது தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவருடைய ஒரே லட்சியம்.

Also read: மனைவி பேச்சு மந்திரம் என வாழும் 5 கணவன்மார்கள்.. நயன்தாரா பேச்சை தட்டாத விக்னேஷ் சிவன்

பல வருடங்களாக முன்னணி அந்தஸ்துடன் இருந்த திரிஷாவுக்கு நயன்தாராவின் வரவு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அதிலும் கடந்த சில வருடங்களாக இவர்களுக்கிடையே இருக்கும் போட்டி அதிகமாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதன் காரணமாகவே நயன்தாராவை ஓரம் கட்டாமல் திருமணம் செய்யக்கூடாது என்ற முடிவில் அவர் இருக்கிறாராம்.

இது ஒரு காரணமாக இருந்தாலும் டாப் நடிகர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இவர் இருப்பதும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த இவர் திடீரென அதை கேன்சல் செய்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் தெலுங்கு நடிகர் ராணாவுடன் காதல், பிரேக் அப் என்று ஒரு சர்ச்சை வட்டத்திற்குள்ளேயே இவர் இருந்தார்.

Also read: பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகும் அடுத்த வரலாற்று படம்.. சுடச்சுட அப்டேட் கொடுத்த மணிரத்னம்

இதனால் அவருடைய மார்க்கெட்டும் சரிய தொடங்கியது. அந்த கேப்பில் தான் நயன்தாரா கிடுகிடுவென உயர்ந்து நின்றார். அதைப் பார்த்து அதிர்ந்து போன திரிஷா சோலோ ஹீரோயினாக தன் கெத்தை காட்ட முயன்றார். ஆனால் நயன்தாராவுக்கு அமைந்தது போல் அந்த படங்கள் எதுவும் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.

இப்படி துவண்டு போயிருந்தவருக்கு பொன்னியின் செல்வன் மிகப்பெரும் அதிர்ஷ்டத்தை கொடுத்தது. அதை கெட்டியாக பிடித்துக் கொண்ட மாமி அடுத்தடுத்த வாய்ப்புகளை தனக்கு சொந்தமாக்கி கொண்டு வருகிறார். இப்படிப்பட்ட காரணங்களால் தான் அவர் திருமணம் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறாராம். அதனாலேயே பலரும் திருமணம் குறித்து கேள்வி கேட்கும் போது மழுப்பலாக ஏதாவது ஒரு பதிலை சொல்லி இவர் எஸ்கேப்பாகி விடுகிறார்.

Also read: பிறந்தநாள் ஸ்பெஷலாக லோகேஷுக்கு நச்சுன்னு கிடைத்த முத்தம்.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

Trending News