Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், கடந்த சில வாரங்களாக விஜய் மற்றும் காவிரியின் ஒற்றுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் இரண்டு பேருமே மனதில் இருக்கும் பாரத்தை கொட்டும் வகையில் ஒருவரை ஒருவர் பேசி நன்றாக புரிந்து கொண்டார்கள். காவேரி சொன்னபடி வெண்ணிலா பிரச்சனையை முடிவு கட்டலாம் என்று விஜய் வீட்டிற்கு போகிறார்.
அங்கே தாத்தாவிடம் நானும் காவிரியும் மனம் விட்டு பேசி ஒரு முடிவுக்கு வந்து விட்டோம் என்று பேசிய விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறார். உடனே வெண்ணிலா எப்படி இருக்கிறார் என்று நர்ஸ்யிடம் விசாரித்து வெண்ணிலாவே பார்க்கப் போகிறார். அடுத்ததாக குமரன், மாமியார் பாட்டி மற்றும் நர்மதாவுக்கு டிரஸ் எடுத்து வந்து கொடுக்கிறார். பிறகு எல்லோரும் ஒற்றுமையாக பேசிய நிலையில் காவிரி, விஜய் வீட்டுக்கு எட்டிப் போய் பார்க்கிறார்.
விஜய் காணவில்லை என்றதும் கீழே வந்து பார்க்கிறார். அப்பொழுது மாமி விஜய்க்கு சொந்தக்காரப் பெண்ணை கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று போன் பேசிக் கொண்டிருப்பதை கேட்கிறார். உடனே காவிரி, யாரைப் பற்றி முழுமையாக தெரியாமல் கல்யாண விஷயத்தில் நீங்கள் ஈடுபடாதீர்கள். பிறகு அது உங்களுக்கே பிரச்சனையாக முடிந்து விடும் என்று பயமுறுத்துகிறார்.
அந்த நேரத்தில் விஜய் வந்ததும் மாமி விஜய் இடம் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ண போகிற விஷயத்தை சொல்கிறார். உடனே விஜயும் காவிரியை சீண்டும் விதமாக ஓகே என்று சொல்லி ஆப்பு வைக்கிறார். ஆனால் மாமி இப்படி சொன்னதற்கான காரணம் என்னவென்றால் காவேரி தான் விஜயுடன் மனைவி என்ற சந்தேகம் வந்துவிட்டது. அந்த சந்தேகத்தின் படி தான் காவிரியிடம் சும்மா உசுப்பேத்தும் விதமாக மாமி இப்படி பேசுகிறார்.
இதனை தொடர்ந்து நர்மதாவுக்கு வயிறு வலி வருகிறது., பிறகு என்னவென்று பார்க்கும் பொழுது நர்மதா வயசுக்கு வந்து பெரிய பொண்ணு ஆகிவிட்டார். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் யமுனா நவீன் அனைவரும் வீட்டிற்கு வருகிறார்கள். அத்துடன் நர்மதாவுக்கு தாய் மாமா சீர் அனைத்தையும் மூன்று சகலையும் சேர்ந்து செய்யப் போகிறார்கள்.