சினிமாவில் ஒரு நடிகரின் படம் வெற்றி அடைந்துவிட்டால் அதே படத்தின் அடுத்த அடுத்த பாகங்கள் வெளியாவது வழக்கம். இதற்கு உதாரணம் பில்லா, சிங்கம், கே ஜி எஃப் போன்ற படங்கள் அடங்கும் இதில் பெரும்பாலான படங்களில் 2வது பாகங்களுக்கு மேல் வெற்றி பெறுவது பெரிது அதிசயம் ஆனால் மம்முட்டியின் ஒரு படம் 4 பாகங்களாக வெளியாகி வெற்றியடைந்துள்ளது ஆச்சரியமாக உள்ளது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மம்மூட்டி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே அங்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் மம்முட்டி.
சினிமாவில் மம்முட்டி வளர்ந்து வரும் காலத்தில் அவரை தூக்கிவிட்ட படமென்றால் சிபிஐ டைரிக்குறிப்பு. இப்படம் 1988ஆம் ஆண்டு வெளியாகி மம்முட்டிக்கு பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் 1989 ஆம் ஆண்டு ஜாக்ரதா, 2004 ஆம் ஆண்டு சேதுராம ஐயர் சிபிஐ, 2005 ஆம் ஆண்டு நேரறியான் சிபிஐ, மொத்தம் 4 பாகங்களாக வெளியாகி 32 வருடங்களில் ஹிட் அடித்தன.
2005ஆம் ஆண்டு 4வது பாகம் வெளியாகும் போது 5வது பாகம் வெளியாவதற்கான அறிவிப்புகள் வெளியாயின. தமிழில் மௌனம் சம்மதம் என்ற படத்தை இயக்கிய மது தான் இந்த 4 பாகங்களையும் இயக்கியுள்ளார். இப்படத்தின் 5வது பாகம் உருவாவது உறுதியாகியுள்ளது.
மேலும் இப்படத்தில் ரஞ்சி பணிகர், சௌபின் சாகிர், பாபநாசம் புகழ், சாய்குமார் மற்றும் நடிகை ஆஷா சரத் ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1 பாகம் 2 பாகம் வெற்றி பெறுவதையே பெரிதாக கருதப்படும் இன்றைய காலத்தில் 5வது பாகமாக உருவாவது சினிமாவில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.