புதன்கிழமை, ஜனவரி 8, 2025

மம்முட்டி வீட்டிற்கு திடீரென சென்ற பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்

மலையாள சினிமாவை தன் கைக்குள் வைத்திருக்கும் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால். இவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் இவர்களின் திரைப்படங்கள் ஒன்றாக திரையரங்கில் வெளியிடப்பட்டால் இவர்களது ரசிகர்கள் அடித்துக் கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இரு தரப்பிலும் ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

மலையாள திரைப்பட சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக ஒரு புதிய படம் உருவாக்கப்பட்டது. அந்த படத்துக்கு மம்முட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகவும் மோகன்லாலுக்கு அதிக முக்கியத்துவம் இல்லாததாகவும் கடுமையான விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்து வந்தனர்.

mohanlal
mohanlal

இப்படி இருக்கும் நிலையில் மம்முட்டி கொச்சியில் ஒரு பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டியுள்ளார். அதற்கு மோகன்லால் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தும் மம்முட்டியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த புகைப்படத்தை மோகன்லால் அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் படு பயங்கரமான பரவி வருகிறது.

இருதரப்பு ரசிகர்களும் சண்டை போட்டுக் கொண்டாலும் இவர்கள் இருவரும் ஒற்றுமையாகதான் உள்ளார்கள் என்பது இந்த புகைப்படத்திலேயே தெரிகிறது.

Trending News