விஜய் சேதுபதியின் இயக்குனருக்கு டாட்டா காட்டி எஸ்கேப் ஆன மம்முட்டி.. முரட்டு வில்லனுடன் இணைந்த புது கூட்டணி

Vijay Sethupathi: விஜய் சேதுபதி சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்ப கட்டத்தில் இவருடன் நடித்த சக நடிகர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும்படி அவர்களை கையோடு கூட்டிட்டு வருகிறார். அதிலும் சில குறிப்பிட்ட இயக்குனர்களுடன் குறைந்தது மூன்று நான்கு படங்களில் நடித்து விடுவார். அப்படி இவருடன் ஒரு விதத்தில் நெருங்கிய நண்பராக ஆனவர் தான் இயக்குனர் மணிகண்டன்.

இவர் காக்கா முட்டை படத்தை எடுத்ததன் மூலம் பரீட்சியமானார். இந்த படத்திற்காக சிறந்த இயக்குனர் என்கிற விருதையும் பெற்றார். அதன் பின் குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற படங்களை எடுத்து சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் இவருடைய பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

அப்படிப்பட்ட இவர் மறுபடியும் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து படம் பண்ணுவதற்கு தயாராகி இருந்தார். அத்துடன் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மம்முட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மம்முட்டிக்கும் கதை பிடித்துப் போனதால் நடிப்பதற்கு சம்மதத்தை தெரிவித்திருந்தார். ஆனால் திடீரென்று இந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று பின் வாங்கி விட்டார்.

Also read: அஜித்துக்கே டஃப் கொடுக்கும் மக்கள் செல்வன்.. 12 கிலோ குறைத்து பிட்டாக மாறிய விஜய் சேதுபதியின் வைரல் போட்டோ

அதற்கு காரணம் மம்முட்டி ஏற்கனவே ரெண்டு படங்களில் கமிட்டாகி இருந்திருக்கிறார். அந்த வகையில் இவரோட கதையும் நன்றாக இருந்ததால் ஓகே சொல்லி இருந்தார். ஆனால் திடீரென்று இயக்குனர் மணிகண்டன் அந்த கதையை வெப் சீரியஸ் மூலமாக கொண்டு போகலாம் என்று முடிவு பண்ணி விட்டார். இதை தெரிந்து கொண்ட மம்முட்டி எனக்கு இது செட் ஆகவில்லை என்று இயக்குனருக்கு டாட்டா காட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

அதனால் தற்போது மம்முட்டி கதாபாத்திரத்திற்கு பாலிவுட் வில்லனை தேர்வு பண்ணி இருக்கிறார். இவர் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் 250 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். அந்த வகையில் மணிகண்டன் தேர்வு செய்த நடிகர் யார் என்றால் ஜாக்கி ஷெராப். இவரை பார்ப்பதற்கே முரட்டு வில்லனாகத்தான் இருக்கும்.

அப்படிப்பட்ட இவரை தேர்வு செய்து இருக்கிறார் என்றால் கண்டிப்பாக ஒரு நெகட்டிவ் ரோல் தான் இருக்கும். அந்த வகையில் மம்முட்டி நடிக்காமல் போனது ஒரு விதத்துக்கு நல்லதாக போச்சு. ஏனென்றால் மம்மூட்டியை நெகட்டிவ் கேரக்டரிலோ அல்லது கொடூரவில்லனாகவோ நினைத்துப் பார்க்க முடியாது. அதனால் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் மம்மூட்டி இதில் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. மேலும் இயக்குனர் மணிகண்டன், விஜய் சேதுபதி மற்றும் ஜாக்கி ஷெராப் கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும்.

Also read: மிஷ்கினுக்காக விஜய் சேதுபதி இறங்கி செய்யப் போகும் சம்பவம்.. வைரலாகும் ஃபஸ்ட் லுக் போஸ்டர்