திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகிய மம்முட்டி.. காரணம் இதுதான்

Vijay Sethupathi – mammootty : விஜய் சேதுபதி இப்போது தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தமிழிலும் விஜய் சேதுபதி லைன் அப்பில் நிறைய படங்கள் உள்ள நிலையில் காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. தற்போது வரை மலையாளத்தில் முன்னணி நடிகராக மம்முட்டி இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் ரஜினிக்கு எப்படி ஒரு பெயர் இருக்கிறதோ அதேபோல தான் மலையாளத்தில் மம்முட்டி அந்த பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கூட அவரது நடிப்பில் வெளியான காதல் தி கோர் படம் ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு மம்முட்டி தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடம் இருந்தது. ஆனால் இப்போது விஜய் சேதுபதி படத்திலிருந்து மம்முட்டி விலகி விட்டாராம்.

Also Read : விஜய் சேதுபதியின் இயக்குனருக்கு டாட்டா காட்டி எஸ்கேப் ஆன மம்முட்டி.. முரட்டு வில்லனுடன் இணைந்த புது கூட்டணி

இதற்கு காரணம் ஆரம்பத்தில் மணிகண்டன் படமாக இதை எடுத்து வெளியிடலாம் என்று நினைத்த நிலையில் அதன் பிறகு வெப் சீரிஸ் ஆக எடுக்க திட்டமிட்டு இருக்கிறாராம். ஆகையால் தான் வெப் சீரிஸில் நடிக்க விருப்பம் இல்லாமல் மம்முட்டி இந்த படத்தில் இருந்து விலகி விட்டார். இதை அடுத்து பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிஃப் இந்த வெப் சீரிஸில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஏற்கனவே ஜாக்கி ஷெரிஃப் தமிழில் பிகில் மற்றும் ஆரண்ய காண்டம் போன்ற படங்களில் நடித்திருந்தார். கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ஜெயிலர் படத்திலும் அவரது நடிப்பு அபாரமாக இருந்தது. இப்போது முதன் முறையாக விஜய் சேதுபதியுடன் கூட்டணி போட இருக்கிறார்.

Also Read : மலையாள சினிமாவை திருப்பி போட்ட தளபதி பட தேவா.. பத்து வருடத்தில் உடைக்கப்பட்ட மோசமான பிம்பம்

Trending News