Kadhal The Core Movie Review: மம்முட்டியின் நடிப்பில் திரையரங்குகளில் சக்கை போடு போட்ட கண்ணூர் ஸ்குவாட் தற்போது ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதை தொடர்ந்து ஜோதிகாவுடன் மம்முட்டி இணைந்து நடித்திருக்கும் காதல் தி கோர் படமும் வெளியாகி இருக்கிறது. அதன் விமர்சனத்தை இங்கு காண்போம்.
பேங்கில் வேலை செய்யும் மம்முட்டி தன் மனைவி ஜோதிகா மற்றும் மகள் தன் தந்தை என அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஊருக்குள் நல்ல பெயருடன் இருக்கும் இவர் இடைத்தேர்தலில் நிற்க முடிவு செய்யும் நேரத்தில் ஜோதிகா விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு செல்கிறார்.
இது அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் இருபது வருட தாம்பத்தியத்தை ஜோதிகா முடிவுக்கு கொண்டு வர சொல்லும் காரணம் கடும் அதிர்ச்சி அளிக்கிறது. அதாவது தன்னுடைய கணவன் இன்னொரு ஆணுடன் உறவில் இருக்கிறார் என கூறுகிறார். இதை மறைத்து இத்தனை வருடங்கள் அவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்.
Also read: மம்முட்டிக்கு சரியான பாடத்தை கற்பித்த மன்சூர்.. பார்க்க தான் கோமாளி ஆன மனசு சொக்கத்தங்கம்
ஆனால் அது பொய் என்று மம்முட்டி வாதாடுகிறார். இப்படிப்பட்ட சிக்கலான வழக்கு எப்படி முடிகிறது என்பது தான் படத்தின் கதை. மலையாளத் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் மம்முட்டி இப்படி ஒரு கதையில் நடிக்க முன் வந்தது நிச்சயம் ஆச்சரியம் தான். ஆனால் ஆர்ப்பாட்டம் இல்லாத எதார்த்தமான நடிப்பை தரும் அவரை விட்டால் இந்த கேரக்டருக்கு வேறு யாரும் நியாயம் சேர்த்திருக்க முடியாது.
சமூகத்தின் முக்கிய பிரச்சினையாக இருக்கும் ஒன்றை துணிச்சலுடன் பதிவு செய்ததற்கே இயக்குனரை பாராட்டலாம். அதிலும் குடும்ப பின்னணியில் இதை சொல்லி இருப்பது சிறப்பு. அந்த வகையில் மம்முட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றால் ஜோதிகா நிதானமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
என்றாவது ஒருநாள் அனைத்தும் மாறும் என்று காத்திருப்பது. ஆனால் கிடைக்காது என்ற பட்சத்தில் பிரிய முடிவெடுப்பது என காட்சிக்கு காட்சி அவர் தன்னை நிரூபித்திருக்கிறார். அதே போன்று இசையும் கதைக்கு பக்க பலமாக இருக்கிறது. இப்படியாக தைரியமாக யாரும் பேச தயங்கும் ஒரு கதையில் துணிந்து நடித்திருக்கும் மம்முட்டி ஜோவுக்காக இப்படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்கலாம். ஆக மொத்தம் காதல் தி கோர்-துணிச்சல்.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3/5